அதிகரிக்கும் வேலையிழப்பு.. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படுகிறோம்.. கதறும் கூலித் தொழிலாளர்கள்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பூர் : இந்தியாவின் டாலர் நகரம், பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படும் திருப்பூரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே ஒரு சாட்சி என்றும் கூறப்படுகிறது. அதிலும் பெரு நிறுவனங்கள் தவிர பல சிறு, குறு நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களுக்கு பெரிய பூட்டாக போட்டு பூட்டிவிட்டன.

வேலையை இழந்து தவிக்கும் அன்றாட பணியாளர்கள், தங்களது அடிப்படை வாழ்வாதாரத்திற்கு கூட கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது. இதை நம்பி பல மாநிலங்களில் இருந்து இங்கு படையெடுத்து வந்து காத்திருப்போரும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காத்திருக்கும் மக்களும், அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேலை வாய்ப்பு எங்கே?
 

வேலை வாய்ப்பு எங்கே?

திருப்பூர் என்றாலே பின்னலாடை என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் மறுபுறம் இத்தொழிலை நம்பி, பல சிறு தொழில்கள் இருப்பதற்கு யாருக்கு தெரியும். ஆமாங்க..உதாரணத்திற்கு ஒரு பனியன் ஆடையை தயாரிக்க, எத்தனை வகையான தையல்கள், அதற்கு தேவையான டெய்லர்கள், விதவிதமான டெய்லரிங், பேட்லாக், ஒவர்லாக், சிங்கர், இன்னும் பல வகையான தையல் மெஷின்கள் அவற்றை தைக்க தெரிந்த தையல் தொழிலாளர்கள், இவர்களை தவிர இதை தைக்க தேவைப்படும் நூல்கள் என பல ஆயிரம் தொழிலாளர்களும், சம்பந்தபட்ட துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட துறைகளும் பாதிப்பு

சம்பந்தப்பட்ட துறைகளும் பாதிப்பு

இந்த கலர் கலரான ஆடைகளில், மக்களை ஈர்க்கும் விதமாக அலங்கரிக்க போடப்படும் விதவிதமான பிரிண்டிங், அதை டிசைன் செய்ய சிஸ்டம் ஆப்ரேட்டர்கள், டிசைனர்கள், இதிலும் டிஜிட்டல் பிரிண்டிங், கையால் செய்யும் பிரிண்டிங், மெஷின்ங்களை சரி செய்யும் மெக்கானிக்குகள், ஆயில் ஸ்டோர், வாகன தொழில், போக்குவரத்து என இன்னும் பல வகையில், பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவு?

ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவு?

ஒரு புறம் ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் பல நிறுவனங்கள் பகுதி நேரமாக வேலை புரிந்து வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அதிலும் சில நிறுவனங்கள், காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் வேலையை மாலை 5 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்களாம். அதிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறையாம். முன்னரெல்லாம் வார இறுதி நாட்களில் கூட விடுமுறை இல்லை. அவசர பீஸ், உடனடியாக டெலிவரி கொடுக்க வேண்டும். ஆக சன்டே கூட வேலை என்று கூறுவார்கள். ஆனால் தற்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை இருப்பதே பெரிதாக இருக்குகிறது என்றும் இங்குள்ள தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

சம்பளம் எப்படி தருகிறார்கள்?
 

சம்பளம் எப்படி தருகிறார்கள்?

முன்னரெல்லாம் பீஸ் ரேட்டுக்கு தைத்து கொண்டிருந்த ஊழியர்கள் தற்போது கூலிக்கு தைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், கூலிக்கு தைத்தால் அவர்களது தைக்கும் திறனை பொறுத்து 500 - 800 வரை சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இன்றே அதிகபட்ச தையல் கூலியே 500 என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதே பீஸ் ரேட்டுக்கு தைத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் தற்போது வந்தால் வரலாம், வராவிட்டாலும் பிரச்சனை இல்லை என்பது போல் தான் நிர்வாகம் இருக்கிறதாம்.

முன்பை விட பாதி சம்பளம் தான் தற்போது

முன்பை விட பாதி சம்பளம் தான் தற்போது

அதையும் மீறி சில நிறுவனங்கள், பீஸ் ரேட்டில் தைக்க கொடுத்தாலும், முதலில் 5 ரூபாய் கொடுத்த நிறுவனங்கள், தற்போது 3 ரூபாய் என்பதே பெரிய விஷயமாக இருக்கிறதாம். இதனால் வாரத்தில் 3000 - 4000 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டிருந்தவர்கள், தற்போது அதில் பாதி வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் புலம்புகிறார்கள். ஊர் விட்டு ஊர் வந்து, வாடகை வீட்டில் தங்கி, பிள்ளைகளை படிக்க வைத்து, வாடகை கொடுத்து, வீட்டு செலவு என வரவுக்கும் செலவுக்குமே பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், நாங்கள் எங்கே அடுத்தடுத்த நிலையை நினைப்பது என்றும் கதறுகிறார்கள் இந்த தையல் தொழிலாளர்கள்.

நிறுவனங்கள் பிரச்சனை இல்லை

நிறுவனங்கள் பிரச்சனை இல்லை

பெரிய பெரிய நிறுவனங்கள் பிரச்சனையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. இவ்வளவு தான் கூலி வந்தா வா. இல்லையெனில், நாங்கள் வேறு ஆளை போட்டுக் கொள்கிறோம் என்ற தோரணையில் பேசுகின்றனவாம். ஏனெனில் திருப்பூரை பொறுத்த வரை தற்காலிக ஊழியர்கள் தான் அதிகம். நிரந்தர ஊழியர் எனபது மிக மிகக் குறைவே. அதிலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தற்போது அதிகம் இங்கு குவிந்துள்ளனர்.

குறைந்த ஊதியத்தில் அதிக ஊழியர்கள்

குறைந்த ஊதியத்தில் அதிக ஊழியர்கள்

நமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும் கூலியை விட, அவர்களுக்கு கூலி குறைவு தான். முன்னர் குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்த அவர்கள் தற்போது பரவலாக அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் அதிகப்படியான ஆட்கள் சொன்னதை செய்யும் வேலையை செய்ய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றனவாம்.

ஜாப் ஒர்க்கும் இல்லை

ஜாப் ஒர்க்கும் இல்லை

நிறுவன ஊழியர்களை விட, சிறு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களே இங்கு அதிகம். உதாரணமாக எஸ்.பி அப்பாரல்ஸ், இந்தியா டெக்ஸ், ஈஸ்ட்மேன் உள்பட இன்னும் பல நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் எடுக்கும் சிறு குறு நிறுவனங்கள் ஏராளம். இங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். ஆனால் தற்போது இந்த பெரிய நிறுவனங்கள் ஜி.எஸ்.டியுடன் பில் கேட்பதால், அதுவே பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும், மேலும் முன்னர் பெரிய நிறுவனங்கள் ஒரு பீஸூக்கு 10 ரூபாய் கொடுத்து வந்த நிலையில், தற்போது 5 ரூபாய் கூட கொடுப்பதில்லையாம். அதேபோல் உதாரணத்திற்கு வாரம் 5 லட்சம் பீஸ்கள் வரை ஆர்டர்கள் கொடுத்த நிலையில், தற்போது 1 - 2 லட்சம் பீஸ்கள் கொடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளன.

கண்ணீரில் ஊழியர்கள்

கண்ணீரில் ஊழியர்கள்

ஒரு புறம் சிறு நிறுவனங்கள் பல மூடப்பட்டு வரும் நிலையில், பல ஆயிரம் பேர் வேலை இழந்து வருகின்றனர். அதிலும் இருக்கும் சில ஆயிரம் பேருக்கும் வேலை குறைவாகத் தான் இருக்கிறதாம். இதனால் முன்னர் வாங்கிய சம்பளத்தில் பாதி கூட கிடைப்பதில்லையாம். ஆக அடுத்து என்ன செய்யலாம் என பலர் இடம்பெயர ஆரம்பித்துள்ளனராம். இதே பெரு நிறுவனங்களில் முன்னர் 50 பேர் இருந்த இடத்தில் 25 பேர் தான் இருக்கிறார்களாம். இதனால் ஒரு நிறுவனத்தில் 10,000 பேர் வேலை செய்கிறார்கள் என்றால், தற்போது கூட 5000 - 6000 பேர் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் 100பேருக்கு 1 லட்சம் பீஸ்கள் தைக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது, 50 பேர் அதை தைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அதே சமயம் சம்பளம் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் வேலையிழப்பு

அதிகரிக்கும் வேலையிழப்பு

இதே நிலை தொடர்ந்தால், இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் நிலவி வருகிறது. நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பெரிய நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், சிறு நிறுவனங்கள் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன. எனினும் வரும் தீபாவளி சீசனில் ஆவது இது பெரிய அளவில் ஏற்றம் காணாவிட்டாலும், நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றும் இங்குள்ள சிறு குறு நிறுவனங்களும் தொழிலாளர்களும் கூறுகிறார்கள்.

அரசு கைகொடுக்க வேண்டும்

அரசு கைகொடுக்க வேண்டும்

மேலும் இங்குள்ள சிறு ஜாப் ஒர்க் செய்யும் சிறு குறு நிறுவனங்கள் மந்த நிலையில் உள்ள எங்கள் தொழில், ஜி.எஸ்.டியால் மேலும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை அரசாக பார்த்து எங்களது தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். டாலர் சிட்டி என்றழைக்கப்படும் நகரத்திலேயே இப்போது பணப்புழக்கம் மிக மந்தமாக இருப்பதால் மற்ற தொழில்களும் மந்த நிலையிலேயே காணப்படுகின்றன என்றும் கதறுகிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unemployment : most small companies are closed in Tirupur

Unemployment : most small companies are closed in Tirupur
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X