11 வருட சரிவில் யுவான் மதிப்பு.. பாவம் சீனா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் எப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது, இதில் குறிப்பாக அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பு.

டொனால்டு டிரம்ப், சீனாவில் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்துள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களை, உடனடியாக மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்க நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வேலையிழப்பு.. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படுகிறோம்.. கதறும் கூலித் தொழிலாளர்கள்..

சீனா
 

சீனா

இதன் எதிரொலியாக அமெரிக்கா, சீனா பங்குச்சந்தை மட்டும் இல்லாமல் சர்வதேசச் சந்தையும் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் தற்போது அமெரிக்க அரசு பத்திர முதலீட்டுக்கும், தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

11 வருட சரிவு

11 வருட சரிவு

இதனால் அமெரிக்கா டாலர் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து சில வாரங்களாகவே வலிமை அடைந்து வருகிறது. இந்த நிலையில் தான் சீன நாணய மதிப்பு 11 வருடச் சரிவைச் சந்தித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

சீனா பொருளாதாரம்

சீனா பொருளாதாரம்

அமெரிக்காவின் தொடர் வர்த்தகப் போரின் காரணமாகச் சீனாவின் பொருளாதாரம் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து வருகிறது. இது இந்நாட்டின் வர்த்தகத்தை மட்டும் அல்லாமல் மக்களின் வேலைவாய்ப்பில் துவங்கி, வருமானம், நாணய மதிப்பு எனப் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவான் மதிப்பு
 

யுவான் மதிப்பு

தற்போது சீன யுவான் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 7.1500 ஆகச் சரிந்து 2008ஆம் ஆண்டின் நிலையைப் பதிவு செய்துள்ளது. இதே நேரத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,548.93 டாலர் என்ற உச்ச நிலையை அடைந்துள்ளது, இது கடந்த ஏப்ரல் 2013 ஆம்ஆண்டின் உச்ச விலை.

அமெரிக்கா - சீனா

அமெரிக்கா - சீனா

அமெரிக்கா தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், சேவைக்கும் அதிகளவிலான வரி விதித்து அமெரிக்கர்கள் சீனாவை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

சீனா கடும் போட்டி

சீனா கடும் போட்டி

இதேபோல் சீனாவும் அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இருநாடுகளுக்கும் மத்தியில் தற்போது பாதிப்பு, மக்கள் நலன் ஆகியவற்றைத் தாண்டி ஈகோ பிரச்சனை பெரியதாக உள்ளது. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது தான் இந்த வர்த்தகப் போர்.

5 சதவீத வரி

5 சதவீத வரி

டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போது சீனாவின் 550 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 5 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது. இது அமெரிக்காவிற்கு எதிராகச் சீனா அறிவித்த 75 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிக்குப் பின் அமெரிக்கா 5 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: world news yuan yen us china trade war
English summary

Yuan falls to 11-year low on trade war

China's yuan hit an 11-year low in onshore trade and tumbled to a record low in offshore trade after a sharp re-escalation in the U.S.-China trade war whacked investor confidence and darkened the global economic outlook.
Story first published: Tuesday, August 27, 2019, 12:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?