ஆர்பிஐக்கு ரெட் அலர்ட்.. அவசர கால நிதியை கொடுக்க வேண்டாம்.. கடுமையான பிரச்சனையை சந்திப்போம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள மோடி தலைமையிலான அரசுக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் உபயோகமாக இருக்கும். இதன் மூலம் மத்திய அரசு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறப்பட்டாலும், பல பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் இதற்கு சிவப்பு கொடியே காட்டியுள்ளனர்.

 

ஏன் இதனால் அரசு மக்களுக்கு நன்மை செய்யும் காரியங்களைத் தானே செய்யப் போகிறது, இதனால் என்ன பிரச்சனை? ஏன் பொருளாதார நிபுனர்கள் இதை வேண்டாம் என்று தடுக்கிறார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.

அதிலும் இதற்கு முன்பு ஆர்.பி.ஐயின் கவர்னராக இருந்த உர்ஜித் சிங் பர்னாலா, ஆர்.பி.ஐயின் துணை ஆளுனராக இருந்த விரால் ஆச்சார்யா உள்ளிட்டோர் தங்களது சொந்த காரணங்களுக்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தாலும், அது இன்றுவரை ஆர்.பி.ஐயிடம் இருக்கும் உபரி நிதியை மத்திய அரசு கேட்டதால் எழுந்த சர்ச்சையால் இருவரும் ராஜினாமா செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் பின்னணி என்ன?

இதன் பின்னணி என்ன?

இந்த நிலையில் புதிய ஆளுனராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சக்தி காந்தா தாஸ், மத்திய அரசு 1.76 லட்சம் கோடி ரூபாயை கொடுக்க முன் வந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு பொருளாதார நிபுனர்களும், வல்லுனர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையை கொண்டு வரும் என்றும் எச்சரித்துள்ளனர். ஒரு புறம் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டாலும், மறுபுறம் எதிர்ப்புகள் சற்று பலமாகவே நிலவி வருகிறது.

மற்ற நாடுகளின் இருப்பு எப்படி?

மற்ற நாடுகளின் இருப்பு எப்படி?

பொதுவாக ஆர்.பி.ஐயின் இந்த உபரி இருப்பு, மற்ற நாடுகளில் குறைவு என்று கூறப்படுகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகள் குறைவாகத் தான் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சராசரியாக மற்ற நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் 14 சதவிகிதம் உபரி நிதியை கையில் வைத்திருக்கும் நிலையில். இந்தியாவின் ரிசர்வ் வங்கி 28 சதவிகிதம் உபரி நிதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆர்.பி.ஐயின் முன்னாள் கவர்னர் துவ்வூரி சுப்பாராவ் ஏற்கனவே கூறிய கருத்தில் இந்தியாவின் நிலை வேறு, மற்ற நாடுகளின் நிலை வேறு, இதனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடாதீர்கள், அது உங்களுக்கு முழு பலனையும் கொடுக்காது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.ஐயின் இந்த நிதி எதற்காக?
 

ஆர்.பி.ஐயின் இந்த நிதி எதற்காக?

ஆர்.பி.ஐ வைத்திருக்கும் இந்த உபரி தொகையானது, நாட்டின் அவசர காலங்காளில் உபயோகப்படுத்தப்படும். ஆனால் தற்போதைய நிலையில் அரசு இந்த தொகையை வாங்கி செலவளித்து விட்டால், அவசர காலகட்டத்தில் நாம் யாரை கையேந்தி நிற்க முடியும் என்றும் நிபுனர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஆர்.பி.ஐ தனக்கென இருக்கும் தரத்தினை விட்டுக் கொடுக்கிறது என்றும் பொருளாதார நிபுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆர்.பி.ஐக்கு உபரி எப்படி கிடைக்கிறது?

ஆர்.பி.ஐக்கு உபரி எப்படி கிடைக்கிறது?

இந்திய ரிசர்வ் வங்கியில் மூன்று விதமான நிதிகள் உள்ளன. ஒன்று நாணயம் மற்றும் தங்கம் மறு மதிப்பீட்டு கணக்கு (CGRA), இரண்டாவது தற்செயல் நிதி என்ற அவசரகால நிதி (Contingency Fund), மூன்றாவது சொத்து மேம்பாட்டு நிதி என்ற (ADF) நிதியாகும். இதில் ஃபாரின் எக்சேன்ஞ் எனப்படும் அன்னிய பரிவர்த்தைகள் மற்றும் தங்கம் மூலமே, உபரி வருவாயாக கணிசமான தொகை ஆர்.பி.ஐக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.பி.ஐ எவ்வளவு தொகையை வைத்திருக்க வேண்டும்?

ஆர்.பி.ஐ எவ்வளவு தொகையை வைத்திருக்க வேண்டும்?

இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் எவ்வளவு தொகை மாற்றப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து முரண்படுகின்றன. இது அண்மையில் மிகப்பெரிய பிரச்சனையாகவும் உருவெடுத்தது. மத்தியில் ஆர்.பி.ஐயின் துணை ஆளுனர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை மீறும் அரசுகளின், ஆபத்துகள் பற்றியும் எச்சரித்திருந்தது கவனிக்கதக்கது.

ஆர்.பிஐயின் பொக்கிஷங்களை சோதனை செய்த அரசு

ஆர்.பிஐயின் பொக்கிஷங்களை சோதனை செய்த அரசு

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் பொக்கிஷங்களை, மத்திய அரசு சோதனை செய்வதாகவும் விரால் எச்சரித்திருந்தார். இந்த நிலையிலேயே மத்திய அரசு உலகளாவிய மத்திய வங்கிகளை விட, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அதிக இருப்புகள் இருப்பதாகவும், ஆகவே அந்த அதிகப்படியான தொகையை அரசுக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசு கோரிக்கையையும் வைத்து வந்தது.

ஜலானியை உபயோகப்படுத்திய அரசு

ஜலானியை உபயோகப்படுத்திய அரசு

ஒரு புறம் அதிகப்படியான தொகை, ஆர்.பி.ஐ வைத்திருப்பதாக கூறிய மத்திய அரசு. இதன் பின்னரே பிமல் ஜலானி தலைமையிலான குழு இதை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2018ல் அமைக்கப்பட்ட இந்த குழு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த நிலையிலேயே தற்போது ஆர்.பி.ஐயின் உபரி தொகையிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை கொடுக்க ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Surplus fund transfer : how will this amount help the government and is it move harm the RBI?

Surplus fund transfer : how will this amount help the government and is it move harm the RBI?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X