நாளை முதல் ஆயிரக் கணக்கில் அபராதம்..! உஷார் மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 வரும் செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வருகிறது. அதாவது இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றன. இந்த சட்டத்தில், கவனிக்க வேண்டிய விஷயம், சொல்லப் போனால் பார்த்து பயப்பட வேண்டிய விஷயமே அதில் சொல்லப்பட்டு இருக்கும் அபராதங்கள் மற்றும் தண்டனைகள் தான்.

 

ஆக இனி சாலை விதிகளை மீறினால் கிட்ட தட்ட வாங்கும் சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை அபராதமாகச் செலுத்த வேண்டி இருக்கும். எனவே மிகவும் ஜாக்கிரதையாக முறையாக சாலை விதிகளை பின்பற்றுங்கள்.

நாளை முதல் ஆயிரக் கணக்கில் அபராதம்..! உஷார் மக்களே உஷார்..!

என்ன மாதிரியான சாலை விதிமீறல்களுக்கு, எவ்வளவு அபராதம், என்ன தண்டனைகள் எந்த சட்டப் பிரிவின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

மாத ஆரம்பத்தில் சாலை விதி மீறல்களில் சிக்கினால், சம்பளத்தில் ஒரு பெரும் பகுதி காணாமல் போகும். ஒருவேளை மாதக் கடைசிகளில் சிக்கினால், சுமாராக கடன் வாங்கி சாலை விதி மீறல்களுக்கான அபராதங்கள் கட்ட வேண்டி இருக்கும். எனவே மக்களே உஷாராக வாகனம் ஓட்டுங்கள்.

சாலை விதி மீறல் தவறுகள் (சட்டப் பிரிவுகள்)பழைய அபராதம்புதிய அபராதம் (குறைந்தபட்சம்)
பொதுக் குற்றங்கள் (177)Rs 100Rs 500
சாலை விதி மீறல்கள் புதிய சட்டப் பிரிவு - 177ARs. 100Rs 500
பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது - 178Rs 200Rs 500
அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் இருப்பது - 179Rs 500Rs 2000
ஓட்டுநர் உரிமம் இன்றி அனுமதி வழங்கப்படாத வாகனங்களை ஓட்டுதல் - 180Rs 1000Rs 5000
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டுதல் - 181Rs 500Rs 5000
தகுதி இல்லாமல் வாகனம் ஓட்டுவது - 182Rs 500Rs 10,000
அளவுக்கு மீறி பெரிய வாகனங்களை ஓட்டுவது - 182பிNewRs 5000
அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது - 183Rs 400Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுவது - 184Rs. 1,000Upto Rs 5000
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது - 185Rs 2000Rs 10,000
பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் ரேஸ் ஓட்டுவது - 189Rs 500Rs 5,000
வாகனங்களுக்கு அனுமதி இன்றி ஓட்டுவது - 192ஏUpto Rs 5000Upto Rs 10,000
அக்ரிகேட்டார்கள் விதி மீறல் - 193NewRs 25,000 to Rs 1,00,000
அதிக எடையைக் கொண்டு செல்வது - 194Rs 2,000, and Rs 1,000 per extra tonneRs 20,000, and Rs 2,000 per extra tonne
அதிக பயணிகளை அழைத்துச் செல்வது - 194ஏN.A.Rs 1000 per extra passenger
சீட் பெட்ல் அணியாமல் செல்வது - 194பிRs 100Rs 1,000
இருசக்கர வாகனத்தில் அளவுக்கு அதிகமாக எடையைக் கொண்டு செல்வது - 194சிRs 100Rs 2,000 , Disqualification of licence for 3 months
அவசர வாகனங்களுக்கு வழி விடாதது - 194இNewRs 10,000
வாகனங்களுகு இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது - 196Rs 1,000Rs 2,000
ஜூவினைல் குற்றங்கள் - 199Newகார்டியன்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர்கள் குற்றம் செய்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 25,000 ரூபாய் அபராதத்துடன் 3 வருட சிறை. வாகன்ம் ஓட்டியவர் ஜூவினைல் ஜஸ்டிஸ் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகனத்தின் பதிவுகள் ரத்து செய்யப்படும்.
டாக்குமெண்ட்களை பறிமுதல் செய்யலாம் - 206N.A.கீழ் காணும் சட்டப் பிரிவுகளில் சொல்லப்படும் தவறுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யலாம்.
அதிகாரிகள் தவறு செய்தால் - 210பிN.A.எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த சட்டப் பிரிவில் சொல்லப்பட்டு இருக்கும் தொகைக்கு இரண்டு மடங்கு கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்படும்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

traffic rules violation: penalties and fines are raised new fine will be amended from September 01 2019

traffic rules violation: penalties and fines are raised new fine will be amended from September 01 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X