ஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா.. இனி எரிபொருள் கிடையாது.. ஆயில் நிறுவனங்கள் எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தனியார் நிறுவனங்கள் தான் கடன் பிரச்சனையால் தவித்து வருகின்றன, இதனால் தங்களது செயல்பாடுகளில் பின் தங்கியுள்ளன என்றால், மறுபுறம், பொதுத்துறை நிறுவனங்களும் அப்படிதான் இருக்கின்றன.

 

தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, விமான எரி பொருளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வில்லை என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில் இந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான 4,500 கோடி மதிப்பிலான கடன் தொகையை செலுத்தவில்லை என்றும், இதனால் ஏர் இந்தியாவின் ஆறு விமான தளங்களுக்கு எண்ணெய் சப்ளையினை நிறுத்துவதாக கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு விமான தளங்களான ஹைதராபாத் மற்றும் ரெய்ப்பூர், விமான தளங்களுக்கு எண்ணெய் வழங்க முடியாது என்றும் எச்சரித்துள்ளது ஆயில் மார்கெட்டிங் கம்பெனிகள்.

யார் சொன்னது.. நாங்கள் ஒரு போதும் அந்த வேலையை செய்ய மாட்டோம்.. வோடபோன் ஐடியா அதிரடி!

ஆயில் நிறுவனங்களுக்கு பாக்கி உண்டு

ஆயில் நிறுவனங்களுக்கு பாக்கி உண்டு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆயில் நிறுவனங்கள், ஏர் இந்தியா எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையினை செலுத்த வில்லை. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்களுக்கு, பொதுத்துறை நிறுபவனமான ஏர் இந்தியா 4,300 கோடி ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை இனி இல்லை

ஏர் இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை இனி இல்லை

மேலும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் தினசரி 18 கோடி ரூபாய் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ரொக்கம் மற்றும் கேரி முறையில் அளித்துவந்த எண்ணெய் வழங்களுக்கான நிலுவைத் தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என்றும் ஆயில் நிறுவனங்கள் கோரியுள்ளன. அதிலும் நிலுவையில் உள்ள தொகையினை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும், இல்லையெனில் ஹைதாராபாத் மற்றும் ரெய்ப்பூர் விமான நிலையங்களுக்கும் செப்டம்பர் 6 முதல் எண்ணெய் சப்ளையை நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளி நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தி வைப்பு
 

வெளி நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தி வைப்பு

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 22-அன்று எண்ணெய் நிறுவனங்கள் ஆறு விமான தளங்களுக்கு எண்ணெய் சப்ளையை நிறுத்தியதை அடுத்து, அந்த 6 விமான தளங்களிலும், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹைதாராபாத் மற்றும் ரெய்ப்பூர் விமான தளங்களுக்கும் எண்ணெய் சப்ளையை நிறுத்தும் போது, ஏர் இந்தியா மேலும் வெளிநாட்டு விமான நிறுவனங்களை நிறுத்தக்கூடும் என்றும், இது இன்னும் கடுமையாக இந்த நிறுவனத்தை பாதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

மொத்த நிலுவை எவ்வளவு தான்?

மொத்த நிலுவை எவ்வளவு தான்?

ஏர் இந்தியாவின் மொத்த எரிபொருள் நிலுவையானது, கடந்த மார்ச் 31-வுடன் முடிவடைந்த காலத்தில், 4,600 கோடி ரூபாயாக இருந்து வந்தது. எனினும் ஜூலை 31ம் தேதியில் 4,300 கோடி ரூபாயாக கொண்டு வந்தது. அதே சமயம் இந்த ஆண்டு ஏப்ரல் 1லிருந்து, ஏர் இந்தியா நிறுவனம் தினசரி எரிபொருளுக்காக 18 கோடி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்

இன்னும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்

இது குறித்து ஏர் இந்தியா வட்டாரத்தில் ஏற்கனவே ஆறு விமான தளங்களில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் இந்த நிறுவனம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் மேலும் இரண்டு விமான தளங்களுக்கு நிறுத்தப்பட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை, அதிலும் ஹைதராபாத் விமான தளத்திற்கு நிறுத்தப்பட்டால் நிலைமை இன்னும் வெகு மோசமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil companies warn Air india to stopping fuel supply another 2 airports for unpaid bills

Oil companies warn Air india to stopping fuel supply another 2 airports for unpaid bills
Story first published: Sunday, September 1, 2019, 12:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X