நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்சார தேவை.. நலிவடையும் பொருளாதாரம்.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொருளாதாரம் குறித்தான அறிக்கைகள் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்தியாவின் மின்சார தேவை மட்டும் கிட்டதட்ட 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் பரந்த மந்த நிலைக்கு ஏற்ப வாகனங்களின் தேவையும் குறைந்துள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான தொழில் மயமான மாநிலங்களில் வளர்ச்சி நலிவடைந்துள்ள நிலையில், மின் தேவை வளர்ச்சியானது சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக அதிகளவிலான எண்ணிக்கையிலான வீடுகளில் மின்சார தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் எனில், மறுபுறம் ஆட்டோமொபைல் மற்றும் துணை உற்பத்தி நிலையங்கள் அதிகம் உள்ள தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் தேவை முறையே 2.7 சதவிகிதம் மற்றும் 1.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் பெரிய மின் நுகர்வோரின் மத்தியில், மிகக் குறைந்த தேவையை இது காட்டுகிறது.

தேவை குறைவு

தேவை குறைவு

மற்ற உற்பத்தி மாநிலங்களான ஹரியானா மற்றும் குஜராத்தில், மின்சார தேவை 2.9 மற்றும் 5.3%களாக வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளில் 7.5 சதவிகிதம் மற்றும் 8.8%மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிறைய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் விற்பனை சரிவால், தற்காலிகமாக தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன என்றும், அதிலும் கடந்த ஜூலை மாதத்தில் கார் தேவை இரண்டு சகாப்தங்களாக இல்லாத அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் மாத காலத்தில் மொத்த உற்பத்தி விகிதம், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு 5 சதவிகிதமாக சரிவு கண்டுள்ளது.

தொழில் துறை வளர்ச்சி முக்கியம்

தொழில் துறை வளர்ச்சி முக்கியம்

தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவை அதிகரிப்பு, இந்தியாவில் பணத்தை இழக்கும் மின்சார வினியோகஸ்தர்களின் மறுமலர்ச்சிக்கு முக்கியம் என்றும் கூறப்படுகிறது. இந்த நுகர்வோர்கள் மின் நுகர்வுகளில் பாதிக்கும் மேல் உள்ளனர் என்றும், மேலும் அதிக கட்டணம் செலுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு வணிக நிறுவனங்கள் பயன்பாடு அதிகம் இருப்பதால் தான், மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலருக்கும் மானியம் வழங்க இது உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

 பெட்ரோல், டீசல் நுகர்வு குறைவு
 

பெட்ரோல், டீசல் நுகர்வு குறைவு

இது தவிர தொழிற்சாலை திறனுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள மற்றொரு எரிபொருளான டீசல் பற்றிய தரவுகள், தொழில்துறையில் ஏற்பட்டு வரும் மந்த நிலையை காண்பிக்கிறது என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு காலத்தின் படி, கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் நுகர்வு 2.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் முந்தைய ஆண்டில் இது 4 சதவிகித வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரிவுக்கு ஆட்டோமொபைல் துறை தான் காரணம்

சரிவுக்கு ஆட்டோமொபைல் துறை தான் காரணம்

புதிய தனியார் துறை திட்டங்களை நிறுத்துதல், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவு, மற்றும் கார் பாகங்கள் துறையில் ஏற்பட்ட மந்த நிலை, உள்ளிட்ட பல உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் எரிபொருள் சந்தையில், டீசல் நுகர்வை குறைக்க பங்களித்தன என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Almost 7% growth in India’s electricity demand at a time when economic has cooled to its weakest in six years

Almost 7% growth in India’s electricity demand at a time when economic has cooled to its weakest in six years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X