இது சரியாகிற மாதிரி தெரியல.. கவலையில் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் படு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு வரவிருக்கும் பண்டிகை கால சீசனிலாவது , தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் துவண்டு போயுள்ள தொழில் எழுந்து நிற்கும் என்பதே, ஒட்டுமொத்த துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் இதெல்லாவற்றிலும் மண் அள்ளி போடுவதுபோல, வரவிருக்கும் பண்டிகை கால சீசனில், இந்த வாகன விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பது போல, விற்பனை இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் அதிக மாற்றங்கள் இதுவரை ஏதும் இல்லை. இதனால் உறுதியாக எதையும் கூற முடியாது என்றும் கூறப்படுகிறது.

 விற்பனை குறித்தான விசாரணைகள்

விற்பனை குறித்தான விசாரணைகள்

தற்போது வாகன விற்பனை குறித்தான விசாரணைகள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒத்திவைப்பு தான் தொடர்கிறது என்றும், ஆட்டொமொபல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பின் தலைவர், ஆஷிஸ் ஹர்ஷராஜ் ஹாலே கூறியுள்ளார். மேலும் வாகனத் தொழிலுக்கும் உதவ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சில நடவடிக்கைகள் ஏதேனும் உறுதியான விளைவை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்த ஆஷிஸ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலத்தில் மூன்றில் ஒரு பங்கு விற்பனை

பண்டிகை காலத்தில் மூன்றில் ஒரு பங்கு விற்பனை

ஒரு ஆண்டில் விற்கப்படும் மொத்த வாகன விற்பனை, மொத்த விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு பண்டிகை காலங்களில் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிதியாண்டில் பண்டிகை காலங்களில் விற்பனையானது குறைந்தால், அது ஒட்டுமொத்த விற்பனையும் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

டீலர்களுக்கு வாகனங்களை அனுப்புவதிலேயே வீழ்ச்சி
 

டீலர்களுக்கு வாகனங்களை அனுப்புவதிலேயே வீழ்ச்சி

இதே நேரத்தில் மருதி சுசூகி இந்தியா, ஹூண்டாய் இந்தியா மற்றும் மகேந்திரா அன்ட் மகேந்திரா உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில், டீலர்ஷிப்களுக்கு வாகனங்களை அனுப்புவதில், இரட்டை இலக்க வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இது டீலர்ஷிப்களின் எதிர்ப்பார்ப்பை முடக்கியுள்ளது என்றும், இதே விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓனம் பண்டிகை சீசனில் இது பெருத்த அடியை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

1 லட்சத்துக் கீழ் வாகனங்கள் அளிப்பு

1 லட்சத்துக் கீழ் வாகனங்கள் அளிப்பு

இந்த நிலையில் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகியின் விற்பனை சரிவு 35.9 சதவிகிதம் குறைந்து, 94,728 வாகனங்கள் மட்டுமே விற்பனை குறைந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மூன்றாவது முறையாக இந்த நிறுவனம் டீலர்ஷிபகளுக்கு அளித்த வாகனங்களில் 1 லட்சத்துக்கும் கீழாக அளித்துள்ளது. குறிப்பாக ஜூலை 2017 முதல் இப்படி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கெடுபிடியான கடன் விதிமுறை

கெடுபிடியான கடன் விதிமுறை

இதே போல் மாருதி சுசூகியின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில் 31 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, இதே விற்பனை கடந்த டிசம்பர் 2000த்திலிருந்து, 35 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வாகன விற்பனையை அதிகரிக்க வாகன கடனுக்கான விதிமுறைகளை எளிதாக்கிய நிலையில், பல கடன்களை வசூலிக்க முடியாத நிலையில், தற்போது மீண்டும் அந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை அதிகரிக்குமா என்பதே சந்தேகம் தான் என்றும், ஆட்டோமொபைல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile dealers unsure of a revival in consumer sentiment in upcoming festive season

Automobile dealers unsure of a revival in consumer sentiment in upcoming festive season
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X