ரஷ்யாவுடன் இந்தியா கூட்டணியா.. என்ன விஷயம்.. எதற்கு இந்த கூட்டணி.. பிரதமர் மோடி அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவும், ரஷ்யாவும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவு வைத்திருக்கும் நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் இந்த இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வுகள் காலம் காலமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பேசியதாகவும், அதில் ஸ்பெஷல் வேதியியல் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும், இதை தொழில் நுட்ப ரீதியாகவும் அணுகுவதில் இரு தரப்பினரும் மிக ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனால் இந்தியாவில் மிக மலிவான விலையில் ராணுவ உபகரணங்கள் தயாரிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐ.டி.பி.ஐக்கு மீண்டும் கைகொடுக்கும் எல்.ஐ.சி.. மத்திய அரசும் அதிரடி!ஐ.டி.பி.ஐக்கு மீண்டும் கைகொடுக்கும் எல்.ஐ.சி.. மத்திய அரசும் அதிரடி!

இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யலாம்

இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யலாம்

இவ்வாறு தயாரிக்கப்படும் இராணுவ உபகரணங்களை இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, எனக்கு மிக நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டணி விரைவில் புதிய விதத்தில் அமையும் என்றும், இது நமக்கு ஒரு புதிய ஆற்றலையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்றும், TASS news ஏஜென்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

15 ஒப்பந்தங்களில் கையெப்பம்

15 ஒப்பந்தங்களில் கையெப்பம்

நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கும் - இந்தியாவுக்கும் இடையில், இராணுவம் சம்பந்தமான 15 ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இரஷ்யா - இந்தியா ஒப்பந்தமானது தொழில் நுட்ப கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் மிக நெருங்கிய நண்பர்கள், ஆக நாம் நமது எதிர்கால நலன் கருத வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.

தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்பு

தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்பு

அதே போல் நாம் வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று இல்லாமல், தொழில் நுட்பங்களை மாற்றியமைப்பதில் கவனமாக உள்ளோம். இதை நான் பலமுறை கூறியுள்ளேன். ஆக நாங்கள் இந்த திசையில் தான் செல்ல உள்ளோம். மேலும் இவ்வாறு இராணுவ உபகரணங்கள் உற்பத்தியில் தொழில் நுட்பங்களை உபயோகித்து தயாரிக்க தொடங்கினால் மிக மலிவான விலையில், ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும், இதனால் இதை ரஷ்யாவும் இந்தியாவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் மோடி கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும்

பொருளாதாரத்தை மேம்படுத்தும்

மேலும் இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரமும் இதனால் மேம்பட வாய்ப்புள்ளது என்றும், இதனால் இந்தியா மட்டும் அல்லாமல், ரஷ்யா உள்ளிட்ட இரு நாடுகளின் பொருளாதாரமும் மேம்படும் என்றும், இது துவண்டு போயுள்ள இந்த இரு நாடுகளுக்கும் கைகொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi seeks partnership with Russia for manufacturing weapons

PM Narendra Modi seeks partnership with Russia for manufacturing weapons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X