ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. அச்சத்தில் மற்ற நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு/ டெல்லி : அமேசான் இந்தியா ஏற்கனவே பல இந்தியர்களை தனது சலுகையாலும், தள்ளுபடியாலும் அடிமைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது உணவு டெலிவரி வர்த்தகத்திலும் களமிறங்கியுள்ளது.

தனது ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தால், பல சில்லறை வர்த்தகர்களை முடக்கி வைத்துள்ள நிலையில்,அடுத்த மாதம் தொடங்கவுள்ள உணவு டெலிவரி வர்த்தகத்திலும் பல தள்ளுபடிகளையும் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் முன்னாள் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி, அதிகப்படியான கமிஷன்னால் உணவகங்களுக்கு பெரும் நஷ்டம் என்ற நிலையில், அவைகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. ஆக சரியான நேரமாக பார்த்து தான் அமேசான், இந்த வர்த்தகத்தில் களம் இறங்குகிறது என்றே கூறலாம்.

5 நாட்கள் கட்டாய விடுமுறை.. வீழ்ச்சியின் பிடியில் வாகன துறை.. கலங்கும் அசோக் லேலண்ட் ஊழியர்கள்!

இந்த வர்த்தகத்திற்கு இது சரியான நேரம்
 

இந்த வர்த்தகத்திற்கு இது சரியான நேரம்

சோமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், அமேசானுக்கு இது நல்ல வாய்ப்பாகவே அமையும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் ஃபுட்பாண்டாவையும் வாங்கும் நிலையில், இந்த நிறுவனம் உணவு டெலிவரியில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி விடலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்காக அமேசான் நாடு முழுவதிலும் உள்ள உணவகங்களுடன் தற்போது கையெழுத்திட்டு வருவதாகவும், ஏனெனில் அக்டோபர் முதல் இந்த நிறுவனம் பெங்களுரூ, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தை தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

உணவகங்களுக்கு எவ்வளவு கமிஷன்

உணவகங்களுக்கு எவ்வளவு கமிஷன்

அமேசான் உணவகங்களுடன் 5 - 6 சதவிகித கமிஷனுடன் தற்போது கையெழுத்திட்டு வரும் நிலையில், போட்டி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் 20 - 30 சதவிகித கமிஷனை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது பின்னர் காலபோக்கில் அதிகரிக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அமேசானின் இந்த உணவு டெலிவரி வர்த்தகம் கட்டாயம் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

சர்வதேச அளவில் உணவு வணிகம்

சர்வதேச அளவில் உணவு வணிகம்

உலக அளவில் அமேசான் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தை கடந்த 2015லியே அறிமுகப்படுத்தியது. ஆனால் இது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மூடப்பட்டது. எனினும் லண்டனை தளமாகக் கொண்ட உணவு டெலிவரி ஸ்டார்டப் நிறுனவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமேசான் இன்னும் இந்த உணவு வர்த்தகத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

எங்களுக்கு கவலை இல்லை
 

எங்களுக்கு கவலை இல்லை

ஒரு தரப்பினர் அமேசானின் இந்த உணவு டெலிவரி வர்த்தகம் ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு பெருத்த அடி என்று கூறினாலும், இதே ஸ்விக்கி சோமேட்டோ நிறுவனங்கள் தினசரி 1 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை டெலிவரி செய்கின்றன. ஆக அமேசானின் இந்த வர்த்தகத்தை பற்றி அவை கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, என்றும் இத்தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India ready to start food delivery with low restaurant commissions for next month

Amazon India ready to start food delivery with low restaurant commissions for next month. also amazon is signing up restaurants at a commission of 5-6%. but Swiggy and Zomato already charged above 20%.
Story first published: Friday, September 6, 2019, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X