மோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி 2.0 அரசின் நூறாவது நாளான இன்று, பல்வேறு தலைவர்கள் வாழ்த்தி சொல்லி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள், வெற்றிகரமாக 100 நாட்களில் எந்த வித அபிவிருத்தியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை மாற்றுவதற்கான திட்டங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் பகிங்ரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமை மற்றும் நிலைகுலைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டமிடப்படாத இலக்கு ஏதுமில்லாத நிலையில் கடந்துள்ளது, இந்த 100 நாள் ஆட்சிக்காலம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன
 

பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன

பொதுவாக மனிதர்களுக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள், மேலும் கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்தான எந்த வளர்ச்சியும் இல்லை. அதே சமயம் சிறு வர்த்தகர்கள் பிரச்சமைகளில் இருக்கிறார்.

தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன

தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன

ஆனால் அரசியல் எதிர்களுக்கு எதிராக "vendetta politics against political opponents" அரசியல் மட்டும் உள்ளது. இது தவிர அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், பாஜகாவின் மூத்த பத்திரிக்கையாளர் கபில் சிபில் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி படு வீழ்ச்சி

முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி படு வீழ்ச்சி

அதோடு எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி வெறும் 2 சதவிகிதமாக பதிவு செய்துள்ளன. ஆனால் இதை பாஜக அரசு கேட்க மறுக்கிறது. நமது பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது என்பதை நமது நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார்.

ஜி.டி.பி சரிவு
 

ஜி.டி.பி சரிவு

அதோடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக சரிந்து காணப்படுகிறது. இது அரசாங்கத்தின் அறியாமையையும் மற்றும் மோசமான நிர்வாகத்தின் நேரடி விளைவு என்றும் கூறப்படுகிறது. அதிலும் கடந்த ஜூன் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் 5 சதவிகிதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திறமையற்ற பாஜக அரசு

திறமையற்ற பாஜக அரசு

துறை சார்ந்த பொருளாதார நிபுனர்கள் மற்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பேச்சைக் புறக்கணிப்பதன் மூலம் பாஜக அரசு பொருளாதாரத்தை கையாள்வதிலும் திறமையற்றது என்றும் நிரூபித்துள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வளர்ச்சி படு மோசம்

வளர்ச்சி படு மோசம்

மேலும் ஆட்டோமொபைல் துறை இதுவரை இல்லாத மோசமான நிலையை கண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா சீனாவை விட நமது பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் இந்த அரசு சொல்கிறது. இதை எல்லோரும் சொல்ல வேண்டுமென இந்த அரசு நினைக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi 100 days narendra modi
English summary

Modi 2.0: Rahul gandhi said congratulations to modi govt for 100 days of no development

Modi 2.0: Rahul gandhi said congratulations to modi govt for 100 days of no development. also sibal says Common man's problems are increasing now a days, they facing lot of. also small traders also distress. there is no strategy on education and health.
Story first published: Sunday, September 8, 2019, 18:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X