காய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியைப் பற்றியும் பேசினார்.

 

அதோடு எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இந்திய ஆட்டோமொபை ல் துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இன்றைய இளைஞர்கள் ஓலா, ஒபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார் சேவைகளை அதிகம் பயனபடுத்துவதையும் சரிவுக்குக் காரணமாகச் சொன்னார்.

அவ்வளவு தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பிடித்துக் கொண்டு ட்ரோல் செய்து கொண்டு இருக்கிறது இணைய உலகம். அப்படி ட்ரோல் செய்யப்பட்ட கருத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு.

டிரெண்ட்

டிரெண்ட்

#SayItLikeNirmala #SayItLikeFM #SayItLikeNirmalaTai... என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ட்ரோல் செய்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள் ட்விட்டர் வாசிகள். இந்த ஹேஸ்டேக்குகள் மற்றும் நிதி அமைச்சர் டிரெண்ட் மெல்ல சமூக வலைதளங்கள் முழுக்கவும் பரவிக் கொண்டு இருக்கிறது. சரி அப்படி என்ன தான் ட்ரோல் செய்து இருக்கிறார்கள்...? ஏன் இவ்வளவு கோபம் ..? வாருங்கள் தேர்ந்தெடுத்த ட்விட்களைக் காட்டுகிறோம்.

நாங்க தானா

நாங்க தானா

நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குறிப்பாக வயதானவர்கள் இந்த காலத்து இளைஞர்களின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோவப்படுவது அல்லது "எங்க காலத்துல எல்லாம்" என பேசி வருத்தப்படுவதைப் பார்த்திருப்போம். இப்போது ஒட்டு மொத்த இந்தியாவின் ஆட்டோமொபைல் சரிவுக்கும், இளைஞர்களை குறை சொன்னால் எப்படி என்று தான் லாஜிக் பிடித்து இருக்கிறார்கள். அதோடு டாக்ஸி அதிகம் பயன்படுத்தினால் கூட காரின் தேய்மானம் அதிகமாகி புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்து இருக்க வேண்டுமே எனவும் லாஜிக் பிடிக்கிறார்கள் இளைஞர்கள். சரி ட்விட்டுக்குப் போவோம்.

 

பூரி பிரச்னை

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேல் பூரி விற்பனை சரிவை சந்தித்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் பானி பூரியை அதிகம் சாப்பிடுவது தான்.

 

மருத்துவர்

இனி நான் ஆப்பிள் பழங்களைச் சாப்பிடப் போவதில்லை. ஆப்பிள் சாப்பிட்டால் நான் மருத்துவரிடம் போகத் தேவை ஏற்படாது. நான் இந்திய ஹெல்த் கேர் துறையில் பொருளாதார மந்த நிலை வந்து பாதிப்பு ஏற்படுத்துவதை பார்க்க விரும்பவில்லை.

மருத்துவமனை

இனி நான் மது, போதை மற்றும் புகையிலை போன்றவைகளை பயன்படுத்தப் போகிறேன். தினமும் ஜிம்முக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, 5 நட்சத்திர உணவகங்களில் சாப்பிடுவது என ஹெல்த் கேர் துறையில் பொருளாதார மந்த நிலை வராமல் பார்த்துக் கொள்ளப் போகிறேன்.

பரோட்டா காம்போ

தங்க விலை ஏற்றத்துக்கு நான் நேற்று உருளைக் கிழங்கு பரோட்டா சாப்பிட்டது தான் காரணம். (இந்த ட்விட் கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கிறது)

பீட்ஸா பிரச்னை

இன்றைய இளைஞர்கள் தால் மற்றும் ரொட்டி (அதாங்க பருப்பும், சப்பாத்தியும்) சாப்பிடாமல், பீட்ஸா, பர்கர் எனச் சாப்பிடுவதால் தான் விவசாயத் துறை மந்த நிலையில் இருக்கிறது.

திருமணம் சார் வேலை வாய்ப்புகள்

இன்றைய இளைஞர்கள் லிவ் இன் (Live in relationship) முறையில் வாழ்ந்து வருவதால் தான் திருமணம் சார்ந்த வேலை இழப்புகள் அதிகரித்து இருக்கிறது.

இணையம் காரணம்

சுற்றுலாத் துறை கண்டிருக்கும் பெரிய சரிவுக்கு, மக்கள் ஆன்லைனில் சுற்றுலா தளங்களைப் பார்ப்பது தான் காரணம்.

காய்கறி

காய்கறிகள் விற்பனை சரிவுக்கு ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான் காரணம். இவர்கள் வீட்டுக்கே வந்து உணவை டெலிவரி செய்வதால் தான் காய்கறிகளை மக்கள் வாங்குவதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Due to Swiggy zomato food delivery vegetable sales are down

Due to Swiggy zomato food delivery vegetable sales are down. Because people are not buying vegetable to cook food in their home.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X