என்னாது ரூ.2 லட்சம் அபராதமா.. போக்குவரத்து விதிமீறலா.. டெல்லி போக்குவரத்து துறை அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : புதிய மோட்டார் வாகன விதிகள் என்று அமல்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே, ஆங்காங்கே அதிகளவிலான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறன்றது. ஒரு புறம் இதனால் விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டாலும், ஆங்காங்கே இப்படி சில அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டி மற்றும் வாகன உரிமையாளருக்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 2,00,500 ரூபாய் மொத்தமாக அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் படி இத்தொகை வசூலிக்கப்பட்டதாக கூறியதையடுத்து, இது தான் இதுவரை வசூலித்தலியே அதிக தொகை என்பதால் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கு அபராதம்?

எதற்கு அபராதம்?

நாட்டின் தலை நகரான டெல்லியை சேர்ந்த வாகன ஓட்டிக்கு, இதுவரை நாட்டிலேயே இல்லாத அளவுக்கு, இந்த அளவு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி பல்வேறு குற்றங்களுக்காக இந்த அபாரதம் விதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக அதிகப்படியான பாரம், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும், பியூ.சி சான்றிதல் இல்லாமை, இன்சூரன்ஸ், பதிவு சான்றிதல், சீட் பெல்ட் என இன்னும் பல காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.

எதற்கு எவ்வளவு அபராதம்?

எதற்கு எவ்வளவு அபராதம்?

இந்த சரக்கு வாகனம் அதிகப்படியான பாரம் ஏற்றியதாக கூறி, 20,000 ரூபாயும், இது தவிர 18 டன்னுக்கு மேல் அதிகப்பாரம் ஏற்றியமைக்காக 36,000 ரூபாயும், 18 டன்னுக்கு மேல் ஒவ்வொரு டன்னிற்கும் 2,000 ரூபாயும் அபராதமாக விதிகப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக 69,500 ரூபாய் எனவும், ஆக மொத்தம் ஓட்டுனருக்கும் வாகன உரிமையாளருக்கும் சேர்த்து 2,00,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ராஜஸ்தானில் ரூ.1.41 லட்சம் அபராதம்

ஏற்கனவே ராஜஸ்தானில் ரூ.1.41 லட்சம் அபராதம்

முன்னாதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானைச் சேர்ந்த பகவான் ராம் எனும் டிரக்கின் உரிமையாளருக்கு 1,41,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கான காரணமும் வண்டியில் அதிக பளுவை ஏற்றியது மற்றும் புதிய வாகன விதிகளை கடைபிடிக்காததே என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் இந்த அபராதம் விதிகப்பட்டுள்ளது.

அபாராதம் குறையுமா?

அபாராதம் குறையுமா?

குஜராத் மாநிலத்தில் அம்மாநில அரசு புதிய மோட்டார் வாகன சட்டங்களின் படி, விதிக்கப்பட்ட புதிய அபாராத தொகையினை மாற்றியமைத்துள்ளது. இதே போல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குறைக்கப்படுமா என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு. அதே சமயம் இது போன்ற வாகன ஓட்டிகள் இருப்பதாலேயே நாட்டில் விபத்துகளும் அதிகளவில் நிகழ்கிறது என்றும், சரியான முறையில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களில் செல்லும் போது செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி செல்வதாலேயே அதிகப்படியான விபத்துகள் நடக்கிறது. இது போன்ற தவறுகளை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்வலர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New motor vehicle act 2019 : Truck driver fined 2 lakh in delhi

New motor vehicle act 2019 : Truck driver fined 2 lakh in delhi. the driver and truck owner were a tottal fined above Rs.2 lakh for various traffic violation.
Story first published: Friday, September 13, 2019, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X