10 மாத சரிவில் நுகர்வோர் பணவீக்கம்.. உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகவும் மோசமான நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் சாமானிய மக்கள் தினசரி தேவைகளுக்காக வாங்கும் உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 10 மாத உயர்வை அடைந்துள்ளது.

மத்திய அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்க அளவீடுகளை அறிவித்துள்ளது. இந்தப் பணவீக்க தரவுகள் மக்களின் அன்றாடத் தேவைப்படும் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களைக் காட்டுகிறது. இது சரியான அளவுகளுக்குள் இல்லை என்றால் பல பிரச்சனைகள் உருவாகும்.

சிபிஐ

சிபிஐ

ஆகஸ்ட் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க குறியீடு 3.21 சதவீதமாக உள்ளது, இது ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி நாட்டின் நுகர்வோர் பணவீக்கத்தை 4 சதவீதமாக வைக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்த நிலையில் இதை அடைய முடியாமல் தவித்து வருகிறது.

ஜூலை மாத தரவுகளை விட ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்திருந்தாலும், அவை சாமானியர்களைப் பாதிக்கும் உணவுப் பொருட்களில் மீதான விலை உயர்வில் ஏற்பட்ட தாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள நுகர்வோர் பணவீக்கம் தரவுகளில் ஜூலை மாதத்தை விடவும் ஆகஸ்ட் மாதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு முழுக்க உணவு பணவீக்கத்தால் ஏற்பட்டவை தான். ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் உணவு பணவீக்கம் 2.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 2.36 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் மாத பணவீக்கத்தில் ஏற்பட்ட உயர்வு முழுக்க முழுக்க உணவு பணவீக்கத்தால் ஏற்பட்டது தான். அடுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த 4 சதவீத பணவீக்க இலக்கை தற்போது அறிவித்துள்ள ரெப்போ விகித குறைப்பின் மூலம் அடையும் என ICRA அமைப்பின் மூத்த பொருளாதார வல்லுனர்கள் ஆதித் நாயர் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டின் பணவீக்கம் எப்போதுமே கட்டுக்குள் இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தாலும் விலை வாசி உயர்ந்துவிடும், அதேபோல் குறைவாக இருந்தாலும் வளர்ச்சியில் தொய்வு ஏற்படும். சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வைக்க முடியும்.

அப்படித் தற்போது நாட்டின் வளர்ச்சிக்குச் சரியான பணவீக்க அளவீடாக 4 சதவீதம் என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Retail inflation in august at 10-month high

The retail inflation rate of items such as household goods, fuel, food, etc, have touched a 10-month high in August. CPI inflation rate stood at 3.21 per cent in the month, which was 3.15 per cent in July 2019.
Story first published: Friday, September 13, 2019, 7:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X