அமேசான், பிளிப்கார்ட் தடை.. CAIT திடீர் கோரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பண்டிகையின் போது நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் பல கோடி இந்தியர்கள் அதிகளவிலான தள்ளுபடியில் பொருட்களை வாங்க காத்திகிடக்கும் நிலையில் இந்த அதிரடி தள்ளுபடி விற்பனைக்குப் புதிய பிரச்சனை வந்துள்ளது.

 

நாட்டின் முன்னணி வர்த்தக அமைப்பு மத்திய அரசை பிளிப்கார்ட் மற்றும் அமேசானின் அதிரடி தள்ளுபடி விற்பனையைத் தடை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா..?

விழாக்கால விற்பனை

விழாக்கால விற்பனை

தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் கார், தங்கம் என்பதில் துவங்கி குண்டு ஊசி வரையில் அனைத்தையும் அதிகளவிலான தள்ளுபடிக்கு விற்பனை செய்யப்படும். இது ஆன்லைன் வர்த்தகத்திலும் தொடர்கிறது,
ஆனால் பிரச்சனை என்னவென்றால் அன்லைன் வர்த்தகம் தற்போது இந்திய சந்தையில் ஆதிக்கம் நிறைந்து இருப்பதால் அவர்கள் அறிவிக்கும் தள்ளுபடிகள் மற்ற வர்த்தகர்களுக்குப் பெரும் பிரச்சனையாக விளங்கி வருகிறது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் செப்.29 முதல் 6 நாள் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் Great Indian Festival விற்பனையை அறிவித்துவிட்ட நிலையில் அவை எப்போது துவங்கும் என அறிவிக்கவில்லை.

விற்பனைக்குத் தடை
 

விற்பனைக்குத் தடை

இந்நிலையில் வர்த்தகர்கள் அமைப்பான Confederation of All India Traders (CAIT) அமைப்பு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இத்தள்ளுபடி விற்பனையில் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடிகளை அறிவிக்கிறது.

இது சந்தையில் பொருட்களின் விலையை அடியோடு மாற்றுகிறது. இதனால் விற்பனையாளர்கள் வர்த்தகம் இல்லாமல் தவிக்கின்றனர். இதையும் தாண்டி வர்த்தகச் சட்டதிட்டங்களை மதிக்காமல் ஈகாமர்ஸ் அதிகத் தள்ளுபடியுடன் வர்த்தகம் செய்கிறது. ஆகவே இந்த விழாக்கால விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என CAIT அமைப்பு மத்திய அரசுடன் கோரிக்கை விடுத்துள்ளது.

 

CAIT அமைப்பு

CAIT அமைப்பு

இந்தியாவின் 5 லட்ச விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் CAIT அமைப்பில் உள்ளனர்.

இவ்வமைப்பின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானது தான் என்றாலும், இந்த விற்பனை நடக்கும் முன்னரே தடை விதிக்க முடியாது. தோராயமாகச் செப் 29ஆம் தேதி துவங்கப்படும் விற்பனைக்குப் பின் தான் அரசு நடவடிக்க எடுக்க முடியும்.

 

ஈகாமர்ஸ் துறை

ஈகாமர்ஸ் துறை

ஈகாமர்ஸ் துறையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமீபத்தில் கூட அன்னிய முதலீடுகள் பிரிவில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மத்தியில் நடப்பெற்ற ஒரு அரசு கூட்டத்தில் ஈகாமர்ஸ் தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை அனைத்தும் அரசு விதிகளுக்கும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தான் அறிவிக்கப்படுகிறது. இதைக் கட்டாயமாகப் பின்பற்றுகிறோம் என்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CAIT seeks ban on Amazon, Flipkart's diwali sale

The two e-commerce firms typically hold annual festive season sales ahead of key Dussehra and Diwali. CAIT, which represents 500,000 merchants and traders in India, also demanded a 'blanket ban' on such sales.
Story first published: Saturday, September 14, 2019, 9:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X