உலக சாதனை படைத்த அமேஸான்..! உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய இ காமர்ஸ் நிறுவனங்களில் அமேஸான் நிறுவனமும் ஒன்று. இப்போது அமேஸான் நிறுவனம், தன்னுடைய மிகப் பெரிய அலுவலகம் ஒன்றைத் திறந்து இருக்கிறது. அமேஸான் நிறுவனத்துக்கு இந்த உலகில் இருக்கும் அலுவலகங்களிலேயே இப்போது திறந்து இருக்கும் இந்த அலுவலகம் தான் மிகப் பெரியதாம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன என்றால்... அந்த அலுவலகம் நம் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் அமைந்து இருக்கிறது.

9.5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இந்த அலுவலகம் தான், அமெரிக்காவுக்கு வெளியே, அமேஸான் நிறுவனம் தன் சொந்த காசைப் போட்டுக் கட்டிய (மொத்தமாக விலைக்கு வாங்கிய என வைத்துக் கொள்ளலாம்) முதல் அலுவலகமாம். உலகிலேயே மிகப் பெரிய கட்டிடம் என்கிற பெயரையும் இந்த அமேஸான் நிறுவனத்தின் ஹைதராபாத் கட்டிடம் உரிமை கொண்டாடுகிறது.

உலக சாதனை படைத்த அமேஸான்..! உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..?

உலகின் மிகப் பெரிய கட்டிடமான அமேஸான் அலுவலக கட்டடத்தில் 49 லிஃப்டுகள் இருக்கிறதாம். ஒரே நேரத்தில் சுமாராக 970 பேரை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லுமாம். இந்த கட்டிடத்தின் மொத்த உயரம் 282 அடியாம். இந்த கட்டிடத்தில் சுமாராக 15,000 பேருக்கு மேல் வேலை பார்க்க முடியுமாம். அமேஸான் அலுவலகத்தின் கேம்பஸை முழுவதுமாகச் சேர்த்தால் சுமார் 68 ஏக்கர் நிலப்பரப்பு வருமாம். இதில் 12 லட்சம் சதுர அடி நிலப் பரப்பை பார்க்கிங் வசதி மற்றும் உற்சாகப்படுத்திக் கொள்ளும் சேவைகளுக்கு ஒதுக்கி இருக்கிறார்களாம்.

பிரான்சில் இருக்கும் ஈஃபில் டவரைக் கட்டப் பயன்படுத்தி இருக்கும் இரும்பை விட, இந்த ஹைதராபாத் அமேஸான் கட்டிடத்தில் 2.5 மடங்கு கூடுதல் இரும்பை பயன்படுத்தி இருக்கிறார்களாம். இதை அமேஸான் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் ஸ்கோட்டலே கட்டிட திறப்பு விழாவின் போது இதைச் சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இருக்கு.. வேலைக்கு தகுதியான ஆட்கள் தான் இல்லை.. சந்தோஷ் கங்வார்!வேலை இருக்கு.. வேலைக்கு தகுதியான ஆட்கள் தான் இல்லை.. சந்தோஷ் கங்வார்!

மிக குறிப்பாக இந்த அமேஸானின் ஹைதராபாத் அலுவலக கட்டிடம் இன்னொரு விஷயத்திலும் சாதனை படைத்து இருக்கிறது. 3.25 வொர்க் ஸ்டேஷன்களுக்கு ஒரு கான்ஃபிரன்ஸ் அறை இருக்கை என்கிற சாதனையையும் செய்து இருக்கிறதாம். உலக அளவில் சராசரியாக 5 வொர்க் ஸ்டேஷன்களுக்கு ஒரு கான்ஃபிரன்ஸ் ஹால் இருக்கை தான் சராசரியாக இருக்கிறதாம். உங்கள் அலுவலகத்தில் எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon Hyderabad office building world record

Amazon built a very big office building in Hyderabad. It is officially the biggest building in the world
Story first published: Monday, September 16, 2019, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X