ஜியோவிற்குப் போட்டியாக BSNL அதிரடி திட்டம்... 777 ரூபாயில் அட்டகாசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து வர்த்தகச் சரிவு மற்றும் வருவாய் சரிவால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அளவிற்கு அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கிறது. இதற்கிடையில் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் மலிவான சேவைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது.

 

இதைச் சரி செய்யப் பிஎஸ்என்எல் ஜூலை மாதம் தனது சேவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 777 ரூபாய் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஜியோ உடன் போட்டிப் போடும் முடிவிலேயே இதை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல்.

அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..!அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..!

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

பிஎஸ்என்எல் தனது சேவை பட்டியலில் இருந்து ஜூலை மாதம் 777 ரூபாய் மதிப்பிலான பிராண்ட்பேன்ட் சேவையை நீக்கிவிட்டு புதிய 849 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்தது.

இது பல்வேறு கேள்வியை எழுப்பியது மட்டும் அல்லால் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்துவிட்டது. இதை உணர்ந்த பிஎஸ்என்எல் மீண்டும் சேவைப்பட்டியலில் இதை இணைத்துள்ளது.

 

777 ரூபாய் திட்டம்

777 ரூபாய் திட்டம்

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு 500GB அளவிலான டேட்டா-வை 50Mbps வேகத்தில் பயன்படுத்த முடியும். இதேபோல் டேட்டா முடிந்த பின்பு இலவசமாக 2Gbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்த முடியும். இவை அனைத்தும் 777 ரூபாய்க்கு மட்டுமே.

இத்திட்டத்தில் இணைவோர் 6 மாதம் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். 6 மாதத்திற்குப் பின்பு 849 ரூபாய் திட்டத்திற்கு மாற்ற வேண்டும்.

 

அதிகப்படியான திட்டம்
 

அதிகப்படியான திட்டம்


பிஎஸ்என்எல் நிறுவனம் மாதம் 16,999 ரூபாய் வரையில் மிகப்பெரிய திட்டத்தையும் வழங்குகிறது. ஆனால் சேவையின் தரத்தை பார்த்தால் மற்ற தனியார் நிறுவனங்களை விடவும் மிகவும் குறைவு என்பதை மறுக்க முடியாது.

ஜியோவின் அறிமுகம் சந்தையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாகவே பிஎஸ்என்எல் தனது 777 ரூபாய் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. சரி ஜியோ பிராண்ட்பேன்ட் திட்டம் எப்படி இருக்கிறது..?

 

ஜியோ பிராண்ட்பேன்ட்

ஜியோ பிராண்ட்பேன்ட்

இலவச லோக்கல் வாய்ஸ் கால், இந்தியாவில் கிடைக்கும் சராசரி இண்டர்நெட் வேகத்தை விடவும் 4 மடங்கு அதிக வேகம் போன்றவற்றையும், சில இலவசங்களையும் சேர்ந்து ஜியோ தனது பிராண்ட்பேன்ட் திட்டத்தை அறிவித்தது.

699 ரூபாயில் துவங்கி 8499 ரூபாய் வரையிலான மாத கட்டணங்களில் 100 Mbps முதல் 1Gbps வேகத்தில் இண்டர்நெட் சேவை அளிக்க உள்ளதாக ஜியோ அறிவித்தது.

 

ஜியோ Vs பிஎஸ்என்எல்

ஜியோ Vs பிஎஸ்என்எல்

ஒரு ஜிபி டேட்டாவை 4 ரூபாய்க்குக் கொடுக்கிறது. இது அடிப்படை திட்டத்தில் கிடைக்கும் இண்டர்நெட்-க்கான விலை.

இதுவே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் 2 ரூபாய்க்குத் தருகிறது.

ஜியோ அளிக்கும் பிரீமியம் சேவையில் ஒரு ஜிபி டேட்டா 1.2 முதல் 1.6 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இது பெரிய அளவில் வித்தியாசம் ஒன்று இல்லை.

 

அடிப்படைத் தேவை

அடிப்படைத் தேவை

இந்திய மக்களின் இன்றைய பயன்பாட்டுத் தேவைக்கு 50 முதல் 200Mbps வேகம் கொண்ட இண்டர்நெட் இருந்தாலே போதும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜியோவின் 1Gbps வேகமும் தேவையற்றதாக இருக்கிறது.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Effect: BSNL Reintroduced Rs. 777 Broadband Plan

The BSNL Rs. 777 plan has been relisted on the Bharat Fiber plan list, alongside the new Rs. 849 broadband plan. It offers speeds of up to 50Mbps with a data FUP of up to 500GB for the 30-day validity period. Post-FUP speed of 2Mbps is offered.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X