ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார் பிரிவில் இருந்து 1,300 பேரை வேலைக்கு எடுக்கலாம் என்றும், இது அமெரிக்கா கார் உற்பத்தியாளருடன் போடவிருக்கும் 5 ஆண்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் செயல்படுத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுவாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சி கண்டு காணப்படும் சூழ்நிலையில், இது எப்படி சாத்தியமாகும் என்றும் நினைக்கிறீர்களா?

ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன?

 

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒரு புறம் கடும் வீழ்ச்சியால் சரிவை சந்தித்தாலும், மறுபுறம் வீழ்ச்சியை தவிர்க்க பல்வேறு அதிரடியான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

சரிவை நோக்கி சந்தை..! பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..!

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 600 - 700 டாலர் வரை இருக்கலாம் என்றும், இது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்திற்கு கிடைக்க போகும் மிகப்பெரிய ஒப்பந்தம் என்றும் கூறப்படுகிறது.

எனினும் டி.சி.எஸ் நிறுவனம் இது குறித்தான மதிப்பை, இன்னும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு தேவையான ஊழியர்களை டி.சி.எஸ் நிறுவனம், ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், ஜி.எம் தொழில்நுட்ப மையத்தில் இருந்து எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக உந்துவிசை அமைப்புகள் (propulsion systems), வாகன பொறியியல், டெஸ்டிங், கிரியேட்டிவ் டிசைன் மற்றும் ஸ்பெஷல் புராஜக்ட் உள்ளிட்ட துறைகளில் விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம் தனது இந்த பெரிய ஒப்பந்த வேலைக்காக, உடன் துணைபுரிய ஜி.எம் தொழில்நுட்ப மையத்தையும் கூட்டு சேர்த்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் இந்த நிறுவனம், வாகன இலாகாவில் பல கண்டுபிடிப்புகளை பெங்களூரு கிளை கண்டுபிடித்துள்ளது என்றும், இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த தரகு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கு சுமார் 130 மில்லியன் டாலர் என ஐந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிக்க முடியும், மேலும் இது இதற்கு அப்பால் புதிப்பித்தலுக்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் இது இந்த நிறுவனத்தின் மதிப்பினை இன்னும் உயர்த்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tcs general motors hiring
English summary

TCS will plan to take 1,300 people from General Motors after get contract from American car maker.

TCS will plan to take 1,300 people from General Motors after get contract from American car maker. And It will also partner with GM to support its global vehicle programs over the next 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X