இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 71.88 ரூபாயாக சரிந்துள்ளது.

இதற்கு அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்திருப்பதும், சவுதியில் எண்ணெய் கிணறும், எண்ணெய் வயலும் தாக்கப்பட்டதையடுத்து கச்சா எண்ணெய் விலையும் மறு புறம் மளமளவென ஏறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் பாதுக்காப்பு கருதி, அமெரிக்கா டாலர் போன்ற முதன்மை கரன்சிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

ரூபாயின் மதிப்பு மளமளவென சரிவு
 

ரூபாயின் மதிப்பு மளமளவென சரிவு

சர்வதேச அளவில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தினை ஹவுதி கிளர்ச்சியாளர்கள், 10 ஆளில்லா விமானம் மூலம், தாக்குதல் நடத்தியதால் பெருத்த சேதம் அடைந்துள்ளது என்றும், இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையில் இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்யில் இரண்டாவது பெரிய இறக்குமதி செய்யும் நாடு சவுதி என்பதால், இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு அதிகம் என்பதால், இதனால் ரூபாயின் மதிப்பு இப்படி மளமளவென சரிந்துள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பிரச்சனை

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பிரச்சனை

சரி இதனால் இந்தியர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கேட்கிறீர்களா? குறிப்பாக வெளி நாடுகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை கணக்கிட்டு வைத்திருப்பார்கள், இப்படி சில நேரங்களில் எதிர்பாராத விதமாக ரூபாய் சரியும்போது அது அங்குள்ள மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும். இதனால் மாணவர்கள் தாங்கள் கட்ட வேண்டிய கட்டணங்களில் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

செலவினங்கள் அதிகரிக்கும்

செலவினங்கள் அதிகரிக்கும்

உதாரணத்திற்கு கடந்த 2017ல் டாலருக்கு 65 ரூபாய் செலுத்திய மாணவர்கள் இன்று 71.88 வரை செலுத்த வேண்டியிருக்கும். இது கிட்டதட்ட 10% அதிகமாகும். மேலும் அவர்களின் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள், டியூசன் கட்டணம், தங்கும் இடம் என அனைத்திற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் முன்னர் கணக்கிட்டதை விட மாணவர்கள் அதிகம் செலுத்த வேண்டியிருப்பதோடு செலவினங்களும் அதிகரிக்கும்.

வெளி நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு பிரச்சனை
 

வெளி நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு பிரச்சனை

வெளி நாடுகளுக்கு பயணம் செய்ய காத்திருப்பவர்கள், ஏற்கனவே செல்ல திட்டமிட்டுருப்பவர்கள், ரூபாயின் சரிவால் முன்னர் கணக்கிட்ட தொகையினை விட அதிக தொகையினை செலுத்த வேண்டியிருக்கும். அதிலும் அவர்கள் ஹோட்டல்கள், ரயில், பஸ், டாக்ஸியில் பயணம் செய்யவும், ஷாப்பிங் செய்யும் போதும் அதிக தொகையினை செலுத்த வேண்டியிருக்கும்.மேலும் பயணித்திற்காக டிக்கெட் முன்னரே பதிவு செய்யாதவர்கள் தற்போது இன்னும் கூட செலுத்த வேண்டியிருக்கும்.

உயரும் பணவீக்கம்

உயரும் பணவீக்கம்

ரூபாய் சரிவால் உருவாகும் முக்கிய பிரச்சனையே பணவீக்கம் தான். தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய், வீழ்ச்சி கண்டு ரூபாயின் மதிப்பு, நேரிடையாக எரிபொருள் விலையில் எதிரொலிக்கலாம். இதனால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும். இது தவிர தினசரி உபயோகப்படும் பொருள்களான விவசாய பொருட்களில் இந்த அழுத்தம் இருக்கலாம், இதனால் அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

ரூபாயின் இந்த வீழ்ச்சியால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம். அதிலும் இந்திய 80 சதவிகித எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. ஆக தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதனால் தினசரி செலவுகளும் அதிகரிக்கும்.

மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்

மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்

மருத்துவ துறையை பொறுத்த வரை, மருத்துவம் சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் மருத்துவ கருவிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் இந்த உபகரணங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கலாம். அதிலும் நீங்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பார்க்க முடிவு செய்திருந்தால், இன்னும் செலவுகள் அதிகரிக்கக் கூடும். அதே போல இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான மருந்துகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இதற்கும் நாம் அதிக தொகை செலுத்தி தான் பெற வேண்டி இருக்கும்.

லேப்டாப், கார்கள் விலை அதிகரிக்கும்

லேப்டாப், கார்கள் விலை அதிகரிக்கும்

இது தவிர கார்கள் லேப்டாப்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆட்டோமொபைல் சார்ந்த உதிர் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அதிகளவு விலை கொடுத்து வாங்கும் உதிரி பாகங்களை உபயோகிக்கும் போது கார்களின் விலையையும் இது அதிகரிக்கும். இதே போல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டார் தொடர்பான உதிர்பாகங்களும் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அன்னிய முதலீடுகள் வெளியேறலாம்

அன்னிய முதலீடுகள் வெளியேறலாம்

இது தவிர கார்கள் லேப்டாப்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஆட்டோமொபைல் சார்ந்த உதிர் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அதிகளவு விலை கொடுத்து வாங்கும் உதிரி பாகங்களை உபயோகிக்கும் போது கார்களின் விலையையும் இது அதிகரிக்கும். இதே போல லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களும் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why rupee falls in continues? How the rupee's down value will impact you?

Indian rupee today fell Rs.71.88 against the US dollar as oil prices skyrocketed after drone attacks on Saudi Aramco
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X