நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நலிந்து வரும் பொருளாதார மந்த நிலையை போக்க ஏதேனும் நடவடிக்கை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, நாங்கள் இ-சிகரெட்டை தடை செய்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வழக்கமாக பொருளாதாரம் குறித்து நடவடிக்கை என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டுவதும், பின் இது போன்ற அறிக்கைகளை கூறுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்

 

நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் மாணவர்களிடையே 78 சதவிகிதம் அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் 900 சதவிகிதம் பேர் இந்த இ-சிகரெட் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும், இதே 300 மில்லியன் அமெரிக்க மக்கள் இந்த இ-சிகரெட் உபயோகப்படுத்துகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் இந்த இ சிகரெட்டால் 7 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்த இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்டவற்றை தடை செய்துள்ளதாகவும், இது தவிர சேமிப்பு மற்றும் இது குறித்தான விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையானது இன்றைய இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இன்று காலையிலேயே டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லமான 7 லோக் கல்யாண் மார்கில், இ-சிகரெட்டுகளின் உற்பத்தி, விநியோகம், கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்ய நடவடிக்கைகளை குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலனை செய்தது என்று கூறப்பட்டது.

இந்த நிலையிலேயே நிர்மலா சீதாராமன் இப்படியொரு அறிவிப்பை கொடுத்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில் தமிழக அரசு இந்த சிகரெட்டை தடை செய்து ஒரு வருடம் ஆகிய நிலையில், மத்திய அரசு தற்போது தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணேய் விலை கொழுந்து விட்டு எரியும் இந்த நிலையில், இந்தியாவில் இதன் எதிரொலி எப்படி இருக்கும், விலை அதிகரிக்குமா? குறையுமா? அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது போன்ற முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது, மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic crisis: Nirmala Sitharaman said ban E-cigarettes

Economic crisis: Nirmala Sitharaman said ban E-cigarettes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X