நிரந்தர ஊழியர்களுக்கு ஆப்பு..! புதிதாக தலை எடுக்கும் Flexi Staffing கலாச்சாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதென்ன..? ஏதோ புதிய பூதம் கிளம்பி இருக்கு போலிருக்கிறதே..? என்று ஆச்சரியப்பட வேண்டாம்.

ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) என்கிற சொல்லை சுருக்கமாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் ஒப்பந்த ஊழியர்கள் எனச் சொல்லலாம்.

இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) என்கிற பெயரில் கொண்டு வந்து இருக்கும் விஷயம் தான் அடுத்த சில வருடங்களில் ஐடி நிறுவனங்களையும், அந்த நிறுவன ஊழியர்களின் தலை விதியையும் மாற்றி எழுதப் போகின்றனவாம்.

பயத்தில் உறைந்து இருக்கும் 23,000 ஊழியர்கள்.. எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை..!பயத்தில் உறைந்து இருக்கும் 23,000 ஊழியர்கள்.. எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை..!

நிலை என்ன..?

நிலை என்ன..?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களை வைத்து தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளும் கலாச்சாரம், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியி அதிகரித்து இருக்கிறது. முதலாளிகள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. குறிப்பாக இந்திய ஐடி & ஐடி சார் துறையில் இந்த ஒப்பந்த ஊழியர்கள் கலாச்சாரம் பெரிய அளவில் தலை எடுத்து கொண்டு வருவதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது.

ஐடி துறை

ஐடி துறை

தற்போது இந்தியாவின் ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்களில் சுமார் 40 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இந்த 40 லட்சம் பேரில் சுமார் 5 லட்சம் பேர், மேலே சொன்ன ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்களாம். அதாவது ஒட்டு மொத்த இந்திய ஐடி மற்றும் ஐடி சார் துறையில் சுமார் 12.5 சதவிகிதம் ஊழியர்கள், இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்களாம்.

சில வருடங்கள்

சில வருடங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டில் சுமார் 3.6 லட்சம் பேர் இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing முறையில் இந்திய ஐடி மற்றும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றினார்களாம். வரும் 2021 ஆம் ஆண்டுக்குள், இந்திய ஐடி மற்றும் ஐடி சார் துறை நிறுவனங்களில், ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை, சுமார் 7 லட்சம் வரைத் தொடும் என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.

தேவை

தேவை

இனி வரும் காலங்களில் இந்தியாவில்ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறை மிகப் பெரிய அளவில் வளரும் எனச் சொல்லி இருக்கிறார்கள் இந்தியன் ஸ்டாஃபிங் பெடரேஷன் என்கிற அமைப்பு. அதற்கு காரணமாக இந்திய நிறுவனங்களில் ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் ஊழியர்களை அமர்த்த இருக்கும் தேவையை சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாக இந்திய ஐடி மற்றும் ஐடி சார் துறைகளில், இந்த பிளக்ஸ் ஸ்டாஃபிங் முறை மிக அதிக அளவில் பரவி இருப்பதற்கு சில காரணங்களையும் பட்டியலிடுகிறார்கள்.

வேலை இருந்தால் காசு

வேலை இருந்தால் காசு

இந்திய ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்களின், ஒவ்வொரு ப்ராஜக்ட்-க்கும் தகுந்தாற் போல தனித் திறமை உள்ளவர்களை மட்டுமே வேலையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. மற்றவர்களை தேவை இல்லாமல் பெஞ்சில் அமர வைத்து சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் விரும்பவதில்லை. அதற்கு பதிலாக இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் தேவையான போது மட்டும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் ஐடி நிறுவனங்கள்.

தீர்வு

தீர்வு

அதோடு இந்திய ஐடி துறையை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த உலக ஐடி துறையையும் இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக் டேட்டா போன்ற விஷயங்கள் ஆட்டிப் படைக்க தொடங்கி இருக்கின்றன. எனவே இந்திய ஐடி துறைக்கும் மேலே சொன்ன இன்றைய கால செயற்கை நுண்ணறிவு மற்றும் பிக் டேட்டா போன்ற துறைகளில் பணியாற்றும் திறன் கொண்ட ஊழியர்கள் தேவையாக இருக்கிறார்கள். இதற்கும் ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் தீர்வு காண முடியும் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

பெங்களூரு

பெங்களூரு

இது ஏதோ அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும் நடந்து கொண்டிருக்கும் விஷயம் என அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே பெங்களூரில் இருக்கும் ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்கள், வெறித்தனமாக இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையால் நிறுவனங்களின் சம்பளச் செலவுகள் ஒரு கணிசமான அளவுக்கு குறைகிறது என்றால் சும்மா இருப்பார்களா என்ன..?

சென்னை

சென்னை

நிரந்தர ஊழியர்களோ அல்லது ஒப்பந்த ஊழியர்களோ.. குறைந்த செலவில் வேலை முடிந்தால் போதும் என்று தானே நிறுவனங்கள் நினைக்கும்..? அதை தான் பெங்களூரு முன்னெடுத்துச் சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சென்னை, ஹைதராபாத், குருகிராம், புனே போன்ற நகரங்களிலும் ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) முறையில் ஐடி சார் நிறுவனங்களில், ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிரந்தரம் அல்ல

நிரந்தரம் அல்ல

இப்போதைக்கு, ஐடி துறை மட்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த கலாச்சாரம் மற்ற துறைகளுக்குப் பரவாதா என்ன..? ஆக இனி வரும் காலங்களில், ஒரு நிறுவனத்தில் நிரந்தர பணியாளராக இருப்பதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும் போல் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 45 வருட உச்சத்தில் இருக்கிறது. அதையே இன்னும் தீர்த்த பாடில்லை. அதற்குள் இப்படி ஃப்ளெக்ஸி ஸ்டாஃபிங் (Flexi Staffing) என இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டால் எப்படி..? நீங்கள் இந்த கட்டுரையை படித்திருக்கும் நேரத்துக்குள்... எத்தனை நிரந்தர ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டு, ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த செலவில் கொடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flexi Staffing: Employees are going to face the flexi staffing job threat

Employees are going to face the flexi staffing job threat in the upcoming years. This flexi staffing may spread across the sectors. This method will reduce the number of permanent employees in a company.
Story first published: Wednesday, September 18, 2019, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X