ஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வருடத்தைப் போலவே மோடி மிகவும் சீரியஸ்யாகத் தனக்குக் கிடைக்கப் பரிசுப் பொருட்களைப் பொது மக்கள் மத்தியில் இணையத் தளம் வாயிலாக இந்த ஆண்டும் ஏலம் நடத்தி பொருட்கள் விற்பனை செய்துள்ளார்.

இதில் ஒரு போட்டோ ஸ்டேண்ட் 1 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய விலைக்கு ஏலம் போய் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..!டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..!

இணையத் தளம்

இணையத் தளம்

National Informatics Centre தலைமையில் உருவாக்கப்பட்ட www.pmmementos.gov.in தளத்தில் கலாச்சார அமைச்சகம் பிரதமர் மோடிக்குக் கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து வருகிறது.

செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் ஆன்லைன் ஏல விற்பனை ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

 

1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்


செப்டம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி ஒரு வெள்ளி கலசம் மற்றும் நரேந்திர மோடி புகைப்படம் கொண்ட ஒரு போட்டோ ஸ்டேண்ட் தலா 1 கோடி ரூபாய் விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

நாடு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இத்தகைய விற்பனை தேவையா என்ற கேள்வியை விட, போட்டோ ஸ்டேண்ட்-ஐ 1 கோடி ரூபாய் வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது, எதற்காக இந்தத் தேவையற்ற பிரபலம் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

 

போட்டோ ஸ்டேண்ட்

போட்டோ ஸ்டேண்ட்


வெறும் 500 ரூபாய் அடிப்படை விலையாக விதிக்கப்பட்ட இந்தப் போட்டோ ஸ்டேண்ட்-இல் மோடியில் புகைப்படத்துடன் குஜராத் மொழியில் அவருக்கான வாழ்த்துகளும் இருக்கிறது.

வெறும் 500 ரூபாய் மதிப்புடைய இந்தப் போட்டோ ஸ்டேண்ட் 1,00,00,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக www.pmmementos.gov.in தளம் தெரிவித்துள்ளது.

 

வெள்ளி கலசம்

வெள்ளி கலசம்

இதேபோல் www.pmmementos.gov.in தளத்தில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளி கலசத்தின் அடிப்படை விலை மதிப்பு என்னவோ 18,000 ரூபாய் தான், ஆனால் அது 1,00,00,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவரை இரண்டுமே திங்கட்கிழமை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற பொருட்கள்

மற்ற பொருட்கள்

இதோடு பசுக் கன்றுக்குட்டி-க்கு பால் கொடுப்பது போன்ற ஒரு உலோக சிலை 1500 அடிப்படை விலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அது 51 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Photo stand, silver Kalash fetch Rs 1 crore each

A silver 'kalash' and a photo stand with a picture of Narendra Modi, both gifted to him, fetched Rs 1 crore each at an e-auction organised by the Culture Ministry, according to the PM Mementos website.
Story first published: Wednesday, September 18, 2019, 10:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X