விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1. All India Bank Officer's Confederation, The 2. All India Bank Officer's Association,
3. The Indian National Bank Officer's Congress 4. The National Organisation of Bank Officers ஆகிய நான்கு வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வரும் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

 

செப்டம்பர் 26 & 27 ஆகிய இரண்டு வேலை நிறுத்த நாள் போக, 28-ம் தேதி செப்டம்பர் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. அதன் பிறகு வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை. எனவே 25-ம் தேதிக்குள்ளேயே மக்கள் தங்களுக்கான வங்கி வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..?

இந்த வங்கி இணைப்பு, தனியார் வங்கிகளுக்கு, இந்திய வங்கிச் சந்தையில் ஒரு இடத்தைக் கொடுத்து விடும். இது மக்களுக்கு எதிரானது எனச் சொல்லி இருக்கிறார்கள் அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பு. அதோடு இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை எனவும் விமர்சித்து இருக்கிறார்கள்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 30, 2019 முதல் அரசு வங்கிகளை இணைக்கும் திட்டம் வெளியானதில் இருந்தே, பொது மக்கள் தொடங்கி வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் வரை பல தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பினர்கள். இந்த செப்டம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்திய பின்பும் அரசு, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர்களுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டு இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

 

ஏற்கனவே இரண்டு முறை அரசு வங்கிகள் இணைத்து இருக்கிறார்கள். அதில் இருந்து எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை, குறிப்பாக வாராக் கடன்கள் குறையவே இல்லை எனவும் சுட்டிக் காட்டுகிறது அனைத்து இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பு. நம் நாட்டு விவசாய பெருமக்களுக்கு, வங்கி சேவைகளை வழங்க பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது அவர்களின் கிராமங்களில் ஒரு வங்கிக் கிளை வேண்டுமா..? எனவும் அழுத்தமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள் AITUC அமைப்பினர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do farmers need big banks or bank branch in their village

AITUC raised a reasonable question to the government. Do farmers need big banks or bank branch in their village. this is the question
Story first published: Friday, September 20, 2019, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X