அதிரடி வரி குறைப்பு..! 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு நல்லது செய்த நிதி அமைச்சர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்துக்கு உண்மையாகவே ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கிறது என்றால் அது இப்போது தான். அப்படி ஒரு மகிழ்ச்சியில் தொழில் துறையினர் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இருக்கும் பல தரப்பட்ட உள் நாட்டு நிறுவனங்களுக்கு செஸ் உட்பட மொத்த கார்ப்பரேட் வரிச் சுமையை 25.17 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

இதற்கு முன் இந்த வரிச் சுமை 30 சதவிகிதம் + செஸ் போன்ற கூடுதல் வரிச் சுமை உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா..? இந்த புதிய 25.17 % வரி விகிதம் 2019 - 20 நிதி ஆண்டிலேயே ஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வந்து விடுகிறதாம்.

அதிரவைக்கும் அறிக்கை.. இந்தியாவின் ஜிடிபி 5.9% தான்.. OECD மதிப்பீடு!

நஷ்டம்

நஷ்டம்

இந்தியாவில் இருக்கும் உள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கும் இந்த சலுகையால், மத்திய அரசுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயை இழக்க வேண்டி இருக்குமாம். அதுவும் ஏற்கனவே நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காலத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் இந்தியாவில் முதலீடுகளை பெருக்குவதற்கும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குமே இந்த அதிரடி நடவடிக்கைகளைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

செட் 1

செட் 1

1. புதிதாக அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15 % மட்டும் வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். அனைத்து சர் சார்ஜ்கள் மற்றும் செஸ் போன்றவைகளை எல்லாம் சேர்த்தால் உற்பத்தி நிறுவனங்கள் 17.01 % வரி செலுத்த வேண்டி இருக்குமாம்.

2. ஒரு நிறுவனம் அரசின் எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது சலுகைகளையோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் 22 % மட்டும் வரி செலுத்தும் விதத்தில் புதிதாக வருமான வரிச் சட்டத்தில் ஒரு சில சரத்துக்களைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

செட் 2
 

செட் 2

3. ஜூலை 05, 2019-க்கு முன், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள், தங்கள் பங்குகளை, அந்தந்த நிறுவனங்களே பை பேக் செய்து கொள்ள அறிவித்து இருந்தவர்கள், வரி செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் இப்போது முழு விலக்கு அளித்து வரி வசூலிக்கப் படாது எனச் சொல்லி இருக்கிறார்.

4. வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஈட்டும் மூல தன ஆதாய வரிக்கு, கூடுதல் சர் சார்ஜ் (Higher Sur charge)விதிக்கப்படாது எனச் சொல்லி ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறார். இது டெரிவேட்டிவ்களுக்கும் பொருந்துமாம்.

செட் 3

செட் 3

5. அரசின் சலுகைகளைப் பெறும் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய Minimum Alternative Tax இனி 18 சதவிகிதத்துக்கு பதிலாக 15 சதவிகிதம் செலுத்தினால் போதுமாம்.

6. 2 சதவிகித CSR தொகையை அரசுக்கோ, அரசு இன்குபேட்டர்களுக்கோ, அரசு உதவி பெறும் கல்வி அமைப்புகளுக்கோ, ஐஐடி-களுக்கோ செலவழிக்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Points to note in corporate tax slashed by nirmala sitharaman

Nirmala sitharaman slashed corporate tax. what are the important points to see in the new announcement.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X