விற்பனையை அதிகரிக்க புதிய வழிய பாருங்க.. அதான் ஜிஎஸ்டியில் மாற்றம் இல்லையே.. சியாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் ஒரே எதிர்பார்ப்பு, தற்போது இருக்கும் 28% ஜிஎஸ்டி விகிதத்தினை 18%மாக குறைக்க வேண்டும் என்பதே. ஆனால் மறுபுறம் இந்த ஒட்டுமொத்த துறையின் வேண்டுகோளையும் சிதறு தேங்காய் போல் உடைத்து விட்டார் மத்திய நிதியமைச்சர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி விகிதம் மாற்றம் இருக்கும் என்று, ஒட்டுமொத்த துறையும் எதிர்பார்த்து வந்த நிலையில், அது பற்றிய எந்த அறிக்கையும் இல்லாமல் போனது.

எனினும் கார்ப்பரேட் வரி விகிதமானது தற்போது இருக்கும் விகிதத்தை விட சுமார் 10% குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சியாமின் (society of Indian Automobile Manufacturers ) தலைவர் ராஜன் வதேரா, ஆட்டொமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க வேறு வழிகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா!ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா!

நீண்டகால கோரிக்கை

நீண்டகால கோரிக்கை

இது தவிர முன்னரே 10 - 13 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கு ஜி.எஸ்டி இழபீட்டு வரி விகிதத்தினை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலாமாகவே இருந்து வருகிறது. ஆனால் அதுவும் முழுமையாக குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரப்படும் நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

அதிலும் கடந்த 10 மாதத்திற்கும் மேலாகவே ஆட்டோமொபைல் துறை படுவீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் வாகன விற்பனை படுவீழ்ச்சி கண்டுள்ளதோடு, வாகன உற்பத்தியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த உதிர் பாகங்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு முக்கிய காரணம் பொருளாதார மந்தம், பணப் நெருக்கடி என்று கூறப்பட்டாலும், ஜிஎஸ்டியும் முக்கிய காரணமாக கருதப்பட்டு வந்தது.

ஏமாற்றமே மிஞ்சியது

ஏமாற்றமே மிஞ்சியது

இந்த நிலையில் இந்த நெருக்கடியை சரிசெய்ய ஜிஎஸ்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த துறையினரின் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் வரி குறைப்பு இருக்கும் என்று மிகுந்த ஆவலோடு இருந்த நிலையில், அது ஏமாற்றத்தையே கொடுத்தது. எனினும் சுற்றுலாத் துறைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில், தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டது.

பலத்த சிக்கலுக்கு நடுவில் ஆட்டோமொபைல் துறை

பலத்த சிக்கலுக்கு நடுவில் ஆட்டோமொபைல் துறை

நெருக்கடியில் உள்ள இத்துறையானது பலத்த சிக்கலுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரவிருக்கும் பண்டிகைகால விற்பனையாவது அதிகரிக்கும், அதிலும் ஜிஎஸ்.டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்தால் கண்டிப்பாக, விற்பனை அதிகரிக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புகளுடன் இருந்த நிலையில், அப்படி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இனி ஆட்டோமொபைல் துறையில் விற்பனையை அதிகரிக்க, வேறு வழிகளைத் தான் கையாள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிரச்சனை நீளுமா?

பிரச்சனை நீளுமா?

அதிலும் தேக்க நிலையில் இருக்கும் ஆட்டோமொபைல் துறையில், அடுத்தாண்டு வரவிருக்கும் பி.எஸ் 6 விதிகள் அமலுக்கு வரும் வரையில் இப்பிரச்சனை நீளும் என்றும் கருதப்படுகிறது. எப்படியோ இத்துறைக்கு ஒரு விடிவுகாலாம் என்பது வந்தால் மட்டுமே நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் பயன் பெற்று வருகின்றனர் என்ற நிலையில் அவர்களின் வேலைக்கு எந்த பாதகாமாக இருக்கும் என்றும், இதே இதனால் பல்லாயிரம் ஷோரூம்கள், உதிரி பாகங்கள் நிறுவனங்கள் என பல வலையிலும் பிரச்சனைகள் நீண்டு கொண்டே இருக்கிறது.

அதிகரிக்கும் வேலையிழப்பு

அதிகரிக்கும் வேலையிழப்பு

முன்னரே பல லட்சம் பேர் வேலையிழந்து வருகின்றனர். ஒரு புறம் நிறுவனங்கள், உற்பத்தியை குறைக்க தொடர்ந்து விடுமுறை அளித்து வருகின்றன. இதனால் பலர் வேலை இருந்தும் ஊதியத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி ஆட்டோமொபைல் துறையில் எப்படி விற்பனை அதிகரிக்கும், பல லட்சம் பேரின் வேலை என்ன வாகும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SIAM says Auto industry to find its own ways to enhance sales

SIAM says Automobile industries to find its own way to increase sales
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X