பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குத் தடையா..? மீண்டும் ஆட்டோமொபைல் துறைக்கு ஆப்பா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுடெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற வேண்டும். சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி தான் பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசு சட்டம் போடட்டும். அதன் பிறகு மாறிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கக் கூடாது.

இப்படி பேசி இருப்பது யார் தெரியுமா..? நம் மத்திய அமைச்சர்களில் ஒருவர். அவர் மீண்டும் தன் மனதில் பட்டதைச் சொல்லி, ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் சந்தையையே மீண்டும் பயத்தில் தள்ளி இருக்கிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. ஆக அரசு பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை கை விடவில்லை என்று தான் தெரிகிறது. அதைத் தான் இந்த மிரட்டல் கலந்த தொனி நமக்குச் சொல்கிறது.

மேம்படுத்தல்

மேம்படுத்தல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே, இப்போது தான் மனம் இறங்கி, ஒரு நல்ல வழி பிடித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதற்குள் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒரே வார்த்தையில் ஆட்டோமொபைல் துறையினரின் நம்பிக்கையை மீண்டும் நொருக்கி எரிந்து இருக்கிறார். இத்தனைக்கும் ஆட்டோமொபைல் விற்பனை எண்ணிக்கை இன்று வரை மேம்பட்டதாகத் தெரியவில்லை.

நேற்றைய மாநாட்டில் பேச்சு

நேற்றைய மாநாட்டில் பேச்சு

நேற்று, எரிசக்தி திறன் குறித்த தேசிய மாநாட்டில் பேசிய போது தான், மேலே சொன்ன முத்தான வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார் நிதின் கட்கரி. வாகனங்கள் கண்டிப்பாக மின்சாரத்தில் தான் ஓட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாறாக பயோ சி என் ஜி, எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களிலும் கூட ஓடலாம் என விளக்கம் வேறு கொடுத்து இருக்கிறார்.

சில தினங்கள் முன்
 

சில தினங்கள் முன்

இதே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான், சில தினங்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், தற்போது பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தும் கம்பஸ்டன் இன்ஜின்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் அதே ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், மின்சார வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்குவார்கள் என போகிற போக்கில் ஒரு குண்டைப் போட்டு போனார்.

முந்தைய பேச்சு

முந்தைய பேச்சு

சில வாரங்களுக்கு முன்பு தான், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்தும் விதத்தில் பேசிய போது, "இந்தியாவில் மின்சார வாகனங்களை கட்டாயப்படுத்தத் தேவை இல்லை. அதே போல பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடையும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை" எனப் பேசி இருந்தார். போகிற போக்கில் இந்தியாவில் மின்சார வாகனங்கள் பெருக வேண்டும் எனவும் சொல்லி கைதட்டல்களை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிகிறதா..?

புரிகிறதா..?

இப்படி ஒரே நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினால் எப்படி..? ஒரு முறை மின்சார வாகனங்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்கிறார். இன்னொரு முறை 2 வருடத்துக்குள் நீங்களே முழுமையாக மின்சார வாகனங்களை தயாரிக்கத் தொடங்குங்கள் என்கிறார். இவருக்கு, தான் என்ன பேசுகிறோம், தன் பேச்சால் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் என்ன மதிரியான பதற்றம் வரும், என்பதை எல்லாம் யோசித்து தான் பேசுகிறாரா..? ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து தான், நம் அமைச்சர் பெருமக்கள் பேசுகிறார்களா..? எனத் தெரியவில்லை.

பிரச்சனை 1

பிரச்சனை 1

கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து
1. பெட்ரோல் டீசல் விலை உயர்வு
2. மோட்டர் இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு
3. சாலை வரிகள் உயர்வு
4. அரசின் கட்டாய பிஎஸ் 6 உற்பத்தி சட்டத்தால் பெரிய அளவில் செலவு செய்து ஆலைகளைப் புதுப் பித்தது போன்ற செலவுகளால், ஒட்டு மொத்த காரின் விலை உயர்ந்தது
5. கார் லோன் வாங்கி கார் வாங்க முடியாத நிலை, காரணம் கடுமையான வங்கி சட்ட திட்டங்கள்.

பிரச்சனை 2

பிரச்சனை 2

6. பிஎஸ் 4 ரக வாகனங்கள் முன்பை போல சுதந்திரமாக பயன்படுத்த முடியுமா அல்லது இப்போது கார் வாங்கச் சொல்லி விட்டு அடுத்த சில வருடங்களில் பிஎஸ் 4 ரக வாகனங்களை ஓட்டக் கூடாது என, அரசு மூக்கை நுழைத்து வாகனங்களின் பதிவுகளை ரத்து செய்துவிடுவார்களா..? என்கிற பெரிய பயம்.
7. மின்சார வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சட்டம் போட்டு விடுவார்களோ என்கிற பயம் (ஏற்கனவே 2023-க்குள் அனைத்து இருசக்கர வாகனங்களும், 2025-க்குள் அனைத்து கார்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் காலக் கெடு விதிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது)... என ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கான காரணங்கள் பட்டியல் நீள்கிறது.

நிதிப் பிரச்னை

நிதிப் பிரச்னை

இப்படி பல பிரச்னைகளுக்கு பயந்து ஏற்கனவே யாரும் வாகனங்களை வாங்குவதாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு நீங்கள் சொன்ன ஓலா உபரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இப்படி உற்பத்தி செய்த வாகனங்களை விற்க முடியாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கையில் போதுமான பணம் இல்லை. அது போக ஏற்கனவே பிஎஸ் 6 ரக வாகனங்களைத் தயாரிக்க, நிறைய முதலீடு வேறு செய்து இருக்கிறார்கள்.

பணம் இல்லை

பணம் இல்லை

எனவே அந்த பக்கமும் பணம் நிறைய செலவாகி இருக்கிறது. இப்படி பல வழிகளில் பணத்தை வாரி இரைத்துவிட்டு, எப்படி போட்ட பணத்தை எடுப்பது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில், மேலும் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து, மின்சார வாகனங்களை தயாரிக்கச் சொன்னால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

அறிவுரை

அறிவுரை

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சிக்கலான நிலையை புரிந்து கொள்லாமல், அடுத்த 2 வருடத்துக்குள் எல்லா பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும். அதற்கு அரசை எதிர்பார்க்காதீர்கள், நீங்களே களம் இறங்கி உற்பத்தியைத் தொடங்குங்கள் என அறிஉரை தொனியில் மிரட்டுகிறார் நிதின் கட்கரி. இப்படி முன்னுக்குப் பின் முரணாகவே பேசிக் கொண்டு இருந்தால் நிதி அமைச்சர் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு கூட பலன் கொடுக்காமல் வீணாகிவிடாதா..? ஐயா பொருளாதார மேதைகளே, ஆட்டோமொபைல் துறையின் நியாயமான கேள்விகள் உங்கள் காதில் விழவில்லையா..?

வசதி இல்லையே

வசதி இல்லையே

இன்னும் இந்தியாவில் மின்சார வாகனங்கள் பெரிய அளவில் வரவில்லை. அதை ஏன் இவ்வளவு வேகமாக கொண்டு வர வேண்டும்? இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை இப்போதைக்கு இல்லை. இந்திய மூன்று சக்கர வாகன விற்பனையில் தாதாவாக இருப்பது பஜாஜ் ஆட்டோ தான். ஆட்டோக்களில் இயற்கை எரிவாயுவை அதிகம் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இங்கு அவர்களுக்கே போதுமான எரிவாயு நிரப்பும் பங்கு வசதிகள் இல்லை. அதற்குள் மின்சார வாகனங்கள் தேவையா..? என இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் கேள்விகள் உங்கள் காதில் விழவில்லையா..?

சார்ஜிங் பாயிண்டுகள் எங்கே.?

சார்ஜிங் பாயிண்டுகள் எங்கே.?

இப்படி இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இயற்கை எரிவாயுவை நிரப்பவே போதுமான வசதிகள் இல்லாத போது... அன்றாடம் மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாமல் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்றப் போகிறீர்கள் என்றால்... எப்படி..? என லாஜிக் பிடித்திருக்கிறது பஜாஜ் நிறுவனம். அதோடு ஏற்கனவே சொன்ன பிஎஸ் 6 முதலீடுகளையும் குறிப்பிட்டு போட்ட காசை எப்போது எடுப்பது எனவும் கேட்கிறார்கள். இப்படித் தான் நீங்கள், உங்கள் நாட்டின் வெல்த் க்ரியேட்டர்களை, ஜாப் க்ரியேட்டர்களை பாதுகாப்பீர்களா..?

சீனா உதாரணம்

சீனா உதாரணம்

சீனாவில் 2015-ம் ஆண்டு, ஒரு நன்னாளில், ஒட்டு மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனைக்கு தடா போட்டுவிட்டார்கள். அதனால் பெரிய அளவில் சீனாவின் ஆட்டோமொபைல் சந்தை அடி வாங்கியது. இந்த அடி அவர்கள் பொருளாதாரத்திலும் பலமாக எதிரொலித்தது. இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டது யார் தெரியுமா..? அவர்களின் உள்நாட்டு தொழில் துறை தான் என்பதையும் அடிக்கோடு போட்டுச் சொல்லி நம்மை எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள். எனவே அமைச்சர் பெருமக்களே, தயவு செய்து அடிப்படை கணக்குகளை புரிந்து கொண்டு பேசுங்கள்.

40 லட்சம் பேர்

40 லட்சம் பேர்

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை நம்பி, சுமார் 40 லட்சம் ஊழியர்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் எதிர் காலத்தை நினைத்து பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இல்லை என்றாலும் பரவாயில்லை, முன்பு சொன்னது போல நான்கு வார்த்தை ஆறுதலாகச் சொல்லுங்கள். அப்படியும் முடியவில்லையா.. அமைதியாக இருங்கள். தயவு செய்து அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்காதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Automobile slowdown: Only electric bus after 2 years Nitin Gadkari speech

Nitin Gadkari said that in next 2 years all the buses will switch over to electric. Do not wait for the government push to cleaner energy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X