ஆபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே குடும்பத்தில் இவ்வளவு வித்தியாசமா என்று வியக்கும் அளவிற்கு அம்பானி குடும்பம் தற்போது இருக்கிறது. அண்ணன் முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் தங்கமாக மாறும் அளவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தம்பி அனில் அம்பானி கையில் இருக்கும் வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து நிறுவனங்களைத் திவாலாக அறிவித்து வருகிறார்.

அனில் அம்பானியிடம் பிரச்சனையில்லாமல் இயங்கும் ஓரே நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிடல் தான் பேசுவதற்குள் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனை வந்துள்ளது. மும்பையின் பிரபலமான கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் தரத்தை BBஇல் இருந்து D தரத்திற்குக் குறைத்துள்ளது.

இந்த அறிவிப்பால் அனில் அம்பானி சோகம் அடைந்துள்ளார்.

கேர் ரேட்டிங்ஸ்

கேர் ரேட்டிங்ஸ்

மும்பையின் பிரபலமான கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் கேப்பிடல் non-convertible debentures-இல் முதலீடு செய்த பலருக்கு கூப்பன் பேமெண்ட்-இல் காலத் தாமதம் செய்யும் காரணத்தால் இந்நிறுவனத்தின் தரத்தை BB-இல் இருந்து 8 மடங்கு குறைத்து D தரத்திற்குக் குறைந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் மொத்த கடன் அளவு தற்போது 5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

ரிலையன்ஸ் கேப்பிடல்

ரிலையன்ஸ் கேப்பிடல்

இதுக்குறித்து ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு விளக்கம் அளித்த அறிக்கையில், வங்கி சர்வர் பிரச்சனையின் காரணமாகத் தான் கூப்பன் பேமெண்ட்-இல் தாமதமானது. பிரச்சனை சரி செய்யப்பட்ட அடுத்த நாளே அனைவருக்கும் பேமெண்ட் செய்துவிட்டோம் என ரிலையன்ஸ் கேப்பிடல் தெரிவித்துள்ளது.

கவலை

கவலை

இந்தத் தற்காலிக பிரச்சனையும், காலதாமதத்தையும் வைத்துத் தரத்தைக் குறைப்பது ஏற்க முடியாது. இந்தத் தர குறைப்பினால் பல கோடி சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் ரிலையன்ஸ் நம்பிக்கை இழக்கும். அதுமட்டும் அல்லாமல் இது ரிலையந்ஸ் நிறுவன பங்குகளின் மதிப்பையும் பெரிய அளவில் பாதிக்கும்.

90 சதவீத சரிவு

90 சதவீத சரிவு

கடந்த வருடத்தில் இத்துறையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையின் காரணமாகப் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிட்ட போதும் இந்நிறுவனப் பங்குகள் 90 சதவீதம் வரையில் சரிந்தது முதலீட்டாளர்களும், சாமானிய மக்களும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Capital downgrade to default grade D

Reliance Capital Ltd.’s downgrade to default grade at Care Ratings Ltd.places the debt of embattled tycoon Anil Ambani’s conglomerate at risk, reigniting India’s credit scare.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X