21,000 போலி கணக்குகள்.. கடன்களை மறைக்க அதிகாரிகள் மோசடி.. சாமனிய மக்களின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் அண்ட் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஏற்கனவே பல பெரும் பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், கடனை திருப்பி அளிக்காதவருக்கும் கடன் கொடுத்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பெரிய இடியாக வாடிக்கையாளர்கள் தலையில் வைத்துள்ளது.

ஏற்கனவே தாங்கள் டெபாசிட் செய்த பணம் வருமா வராதா? என்ற நிலையில், தற்போது தங்களின் பணம் வங்கியில் இருக்குமா? இருக்காதா என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில் கொடுத்த கடன்களை மறைக்க இவ்வங்கி 21,000 போலி வங்கிக் கணக்குகளை ஓபன் செய்து, பொய்யாக கணக்கு காட்டியுள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆர்பிஐ-க்கே அல்வா..! ரூ.1,000 கோடி கடன் மோசடி செய்தோம்! ஒப்புக் கொண்ட அரசு வங்கி அதிகாரி!ஆர்பிஐ-க்கே அல்வா..! ரூ.1,000 கோடி கடன் மோசடி செய்தோம்! ஒப்புக் கொண்ட அரசு வங்கி அதிகாரி!

21,000 போலி கணக்குகள்

21,000 போலி கணக்குகள்

இதில் என்ன கொடுமை என்னவெனில் இவ்வங்கி, தனது ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அரகேற்றியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கொடுத்த கடன்களை மறைக்க, கற்பனையாக போலி வங்கி கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும், அதுவும் ஒன்று இரண்டு அல்ல, 21,000 போலி கணக்குகளை உருவாக்கியிருப்பதாகவும், இந்திய அதிகாரிகள் காவல்துறைக்கு அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது இவ்வங்கியில் டெபாசிட் செய்தவர்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றுதல்

வாடிக்கையாளர்களை ஏமாற்றுதல்

இந்த போலி வங்கி கணக்குகள் ஆர்.பி.ஐ மட்டும் அல்ல, இவ்வங்கியை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த டெபாசிட் தொகை வைப்பாளார்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றும் விதமாகவே இருக்கிறது. சாமானிய மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்கிறார் என்றால் தங்களின் கைககளில் இருந்தால் அது செலவாகிவிடும் என்ற நோக்கில் தான், ஆனால் வங்கிகளே இப்படி ஒரு கீழ்த் தரமான வேலையை செய்தால், இனி சாமானிய மக்கள் யாரைத்தான் நம்பி முதலீடு செய்வது, டெபாசிட் செய்வது?

44 வங்கி கணக்குகள்

44 வங்கி கணக்குகள்

வங்கி நிர்வாகம் செயல்படாத சொத்துகளை மறைத்து, கடன்களை வழங்குவதற்காக இப்படி செயலை செய்ததாகவும், இதன் மூலம் இவ்வங்கிக்கு இன்றைய மதிப்பில் சுமார் 4,384 கோடி ரூபாய் இழப்புக்கு வழி வகுத்தது என்றும் கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவெனில் ஒரு ரியால்டி நிறுவனம், அதன் குழு நிறுவனங்கள் 44 கடன் பயனாளர்களாக இருந்தன என்றும் இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையினை மறைக்க மோசடி

உண்மையினை மறைக்க மோசடி

இப்படியாக இவ்வங்கி கடன் கொடுப்பதை அதிகரிக்க, பல உண்மையினை மறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த வங்கியின் உண்மையான நிலை, அதன் நிதி அளவுகளின் அளவு ஒரு மோசமான படத்தையே பிரதிபலித்தது. மேலும் கற்பனையான கடன் கணக்குகள் மூலம் மோசடி செய்திருப்பதும், இது வங்கியின் முக்கிய விதிமுறைகளை சரிவர செய்ய முடியாததால், இன்னும் பல மோசடிகளை செய்ய காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

யார் மீதெல்லாம் புகார்

யார் மீதெல்லாம் புகார்

இந்த புகாரில் வங்கியில் தலைவர் வாரியம் சிங், அதன் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் மற்றும் இன்னும் சில வங்கி அதிகாரிகளின் பெயர்களை பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல், பொய்யான பதிவுகள் என பல குற்றங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாத ரியாலிட்டி நிறுவனமான திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரிகளான சாரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் உள்ளிட்ட பலரின் பெயரும் இதில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீவிர விசாரணை நடத்தப்படும்

தீவிர விசாரணை நடத்தப்படும்

இது தவிர இவ்வங்கியில் ஹெச்.டி.ஐ.எல் நிறுவனம், பி.எம்.சி வழக்கில் தவறு செய்ததாக கூறப்படும் நிலையில், இதுவும் தீவிரமாக விசாரிக்கப்படும் என்றும் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இன்னும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இது குறித்தான முழுமையான விசாரணை முடிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வங்கித் துறைக்கு பாதிப்பு

வங்கித் துறைக்கு பாதிப்பு

பி.எம்.சி வங்கியின் இந்த சிக்கலான வழக்கு வங்கித் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக இரண்டு டசனுக்கும் மேலாக அதிகமான கூட்டுறவு வங்கிகள், தற்போது ரிசர்வ வங்கியின் கீழ் உள்ளன, ஆனால் பி.எம்.சி வங்கி கடந்த மார்ச் 31 நிலவரப்படி, 116.2 பில்லியன் ரூபாய் இருப்புத் தொகையுடன் உள்ளது, இது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவ்வங்கியின் மோசடியின் காரணமாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் சுமார் 9,00,000 வைப்புத் தொகையாளர்களை கொண்ட இந்தியாவின் முதல் ஐந்து கூட்டுறவு கடன் வழக்குநர்களில் ஒருவரான பி.எம்.சியின் பொறுப்பை ஏற்க நகர்ந்தது. மேலும் இந்த கடன் முறைகேடுகளைக் கண்டறிந்த பின்னரே, இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் அனுமதி வாங்கித்தான் செய்ய வேண்டும்

ரிசர்வ் வங்கியின் அனுமதி வாங்கித்தான் செய்ய வேண்டும்

ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வங்கியை புதுபிக்கவோ அல்லது எந்த வழங்கலும், முதலீடு செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது, அதே நேரத்தில் அடுத்த ஆறுமாதங்களில் பி.எம்.சி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கிலிருந்து தினசரி 10,000 ரூபாய் மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் வங்கி வாடிக்கையாளர்கள் இணைந்து தங்களின் டெபாசிட் நிதியை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யாருக்கெல்லாம் பாதிப்பு

யாருக்கெல்லாம் பாதிப்பு

இந்த வங்கி பிரச்சனையால் பாதிக்கப்படுவது, இந்த வங்கியை நம்பி முதலீடு செய்தவர்களும், சாமானியர்களின் வைப்புத் தொகையும் தான். இதனால் மக்கள் இனி எந்த வங்கியை நம்புவது, எதில் டெபாசிட் செய்வது, வங்கிகள் எப்படி கையாளும், மத்திய ரிசர்வ் வங்கியே இந்த பிரச்சனையை கண்டறிய இத்துணை ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், சாமானிய மக்கள் எப்படி இதைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கேள்விகளே வருகின்றன. எனினும் மக்கள் இதுபோன்ற முதலீடுகள் செய்யும் போது முன் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PMC bank crisis: PMC created over 21,000 fake accounts to cancel loans

PMC created over 21,000 fake accounts to cancel loans. Also there is identified a single realty firm and its group companies were the beneficiaries of 44 loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X