ஒரு ஆட்டால் ரூ.2.68 கோடி நஷ்டம்.. அதுவும் 3.5 மணி நேரத்துல.. கடுப்பில் கோல் இந்தியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புபனேஷ்வர் : கோல் இந்தியாவுக்கு ஒரு ஆட்டினால் 2.68 கோடி ரூபாய் நஷ்டமாகியுள்ளதாகவும், அதுவும் வெறும் 3.5 மணி நேரத்தில் என்றால் நம்ப முடிகிறதா?

 

ஆனால் இது உண்மைதான். ஒரு விபத்தினால் கொல்லப்பட்ட ஆட்டினால், கிழக்கு இந்தியாவில் உள்ளுர்வாசிகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் எதிரொலி தான் இந்த நஷ்டம்.

ஏனெனில் இந்த தொடர் போராட்டத்தினால் கோல் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, சரியான நேரத்திற்கு போய் சேர வேண்டிய நிலக்கரி போய் சேரவில்லை என்பதே உண்மை.

சாம்சங் நிறுவனத்துக்கு இப்படி ஒரு பிரச்சனையா.. கதறும் ஊழியர்கள்!

உள்ளூர் வாசிகள் போராட்டம்

உள்ளூர் வாசிகள் போராட்டம்

ஒடிசாவில் கோல் இந்தியா நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. அங்கிருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு புறப்பட்ட லாரி, ஒரு ஆட்டின் மீது மோதவே அந்த ஆடு உயிரிழந்தது. இந்த நிலையில் தான் அந்த உள்ளூர் மக்கள் அந்த ஆட்டுக்கு 60,000 ரூபாய் நஷ்ட ஈடு தரக் கோரி, சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் நிலக்கரிகள் ஏற்றிச் செல்லும் ரயில் தண்டவாளங்களை மறைத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரயில் பாதையிலும் ஆர்பாட்டம்

ரயில் பாதையிலும் ஆர்பாட்டம்

மேலும் இது தவிர நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில் பாதையையும் மறித்து போராட்டம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம், மதியம் 2.30 மணி நேரம் வரை நடந்த இந்த போராட்டத்தால், ரயில் வேகன்களில் நிலக்கரிகளை நிரப்ப லாரிகளில் கொண்டு செல்லும் பணி விறுவிறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு விபத்தும் நிகழ்ந்துள்ளது.

போராட்டக் காரர்களுடன் பேச்சு வார்த்தை
 

போராட்டக் காரர்களுடன் பேச்சு வார்த்தை

அப்பகுதியில் நிலைமை கைமீறி போகவே கோல் இந்தியா நிறுவனம் போலீசாரை நாடியிருக்கிறது. இந்த நிலையில் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு ஆடு இறந்ததன் விளைவாக அந்த நிலக்கரி நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மகாநதி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

போராட்டகாரர்கள் மீது வழக்கு

போராட்டகாரர்கள் மீது வழக்கு

இந்த நிலையில் போராட்டர்காரர்களின், இந்த போராட்டத்தால் சுமார் 3.5 மணி நேரம் நிலக்கரி ஏற்றி செல்லும் வண்டிகள் செல்ல முடியாமல் தவித்தன என்றும், இதனால் இந்த நிறுவனத்துக்கு சுமார் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போராட்டகாரர்களின் மீது, கோல் இந்தியா வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மகாநதி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிக்கென் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coal India loses Rs.2.7cr in 3.5 hours because of goat

Coal India loses Rs.2.7cr in 3.5 hours because of goat, and Mahanadi Coalfield has lodged a complaint at the local police station against the protesters for this huge loss.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X