3 நாளில் ரூ.3,924 கோடி போச்சு.. கதி கலங்கும் இந்திய சந்தைகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நடப்பு அக்டோபர் மாதத்தில் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே 3,924 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது.

 

உலகளாவிய மந்த நிலை மற்றும் வர்த்தக யுத்தத்தின் அச்சங்களுக்கு மத்தியில் அக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வர்த்தக நாளிலேயே அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், சுமார் 3,924 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னிய முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர்.

3 நாளில் ரூ.3,924 கோடி போச்சு.. கதி கலங்கும் இந்திய சந்தைகள்!

வைப்புத் தொகை தரவுகளின் படி, குறிப்பாக 2,947 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் ஈக்விட்டி சந்தையிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இதே கடன் சந்தையில் இருந்து 977 கோடி ரூபாயும் வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நடப்பு அக்டோபர் மாதத்தில் 1 - 4ம் தேதிக்குள் மொத்தம் 3,924 கோடி ரூபாய் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

கடந்த அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி என்பதால் விடுமுறை ஆதால், இந்த வெளியேற்றவும் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே கடந்த செப்டம்பர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 7,850 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 5.15 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் இந்த வட்டி குறைப்பு என்பது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு செய்தது. இந்த வட்டி குறைப்பு மற்றும் கார்ப்பரேட் வரி குறைப்புகள் அதிகளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்காவிட்டாலும், உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனெனில் உலகளாவிய பொருளாதார மந்தம், முடிவே தெரியாத வர்த்தக போரால் நிலவி வரும் பிரச்சனை என பல காரணங்களால் அன்னிய முதலீடுகள் குறையலாம் என்றும், எனினும் அரசு தற்போது எடுத்து வரும் தீவிர முயற்சியாலும், வட்டி குறைப்பாலும், கார்ப்பரேட் வரி குறைப்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும், இந்த நிலையில் மூன்றாவது காலாண்டில் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் புரோக்கிங் நிறுவனங்கள் கூறுகின்றன.

 

மேலும் அமெரிக்கா ஃபெடரல் வங்கியின் வட்டி குறைப்பானது, அன்னிய முதலீடுகளை தீர்மானிக்கும் என்ற நிலையில், ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வட்டியினை குறைத்த ஃபெடரல் வங்கி, இனியும் ஒரு வட்டி குறைப்பை மேற்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டன்மாக கூறியிருந்தது. ஆனால் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த வட்டி குறைப்பானது பத்தாது எனவும், கட்டாயம் மற்றொரு வட்டி குறைப்பை மத்திய ஃபெடரல் வங்கி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: fpi capital market
English summary

FPIs exit last 3 trading session Rs.3,924 cr from Indian markets

FPIs exit last 3 trading session Rs.3,924 cr from Indian markets, particularly equities worth around Rs.3,000 crore
Story first published: Sunday, October 6, 2019, 17:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X