பயத்தில் 2.38 லட்சம் பணியாளர்கள்.. யார் அந்த 10,000 பேர்.. கதறும் ஹெச்எஸ்பிசி ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங் : இந்தியாவில் தான் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை என பல கோணத்தில் மக்களை துரத்தும் பிரச்சனைகள் என்றால், சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான். அதுவும் உலகம் முழுக்க 67 நாடுகளில் தனது கிளைகளை வைத்திருக்கும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆக உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தம், இந்தியாவை மட்டும் அல்ல உலகம் பூராவும் பாதித்துள்ளது என்பது, ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் இந்த முடிவை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

சரி லண்டனில் உள்ள இந்த வங்கி பணி நீக்கம் செய்யபோகிறது எனில், நாம் ஏன் இந்த செய்தியை போட வேண்டும் என்கிறீர்களா? ஏனெனில் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சிறிய அளவில் பணி நீக்கம் செய்த போதே, இந்த வங்கி அதிகளவில் இந்தியாவில் 150 பேரை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பயத்தில் இந்திய ஊழியர்கள்
 

பயத்தில் இந்திய ஊழியர்கள்

சுமார் 67 நாடுகளில் 3,900 கிளைகளை கொண்ட இந்த வங்கியில் சுமார் மொத்தம் 2.38 லட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், அதில் 150 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வங்கி கூறிய படி லண்டனில் நிலவி வரும் பொருளாதார வளர்ச்சி, இன்னும் பற்பல வேலையிழப்புகளை உருவாக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது எதிர்பார்த்ததைப் போலவே பெரிய அளவிலான பணி நீக்கத்திற்கு திட்டமிட்டுள்ளது ஹெச்.எஸ்.பி.சி. இந்த நிலையில் இந்தியாவில் எத்தனை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட போகிறார்களோ தெரியவில்லை.

எத்தனை பேர் பணி நீக்கம்

எத்தனை பேர் பணி நீக்கம்

கடந்த திங்கட்கிழமையன்றும் அதன் தலைமை நிர்வாகி பதவி விலகிய பிறகு, பலவீனமான உலகளாவிய நிலையால், இவ்வங்கி 4,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. ஆனால் மற்றொரு அறிக்கையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் எது உண்மையான அறிவிப்பு என்று தெரியாவிட்டாலும் பணி நீக்கம் என்பது உண்மையான ஒரு செய்தியாகவே உள்ளது.

எதற்காக இந்த பணி நீக்கம்

எதற்காக இந்த பணி நீக்கம்

மிக வீழ்ச்சியடைந்த வட்டி விகிதம், பிரெக்ஸிட் மற்றும் நீண்டகாலமாக இழுத்து வரும் வர்த்தக போர் இவற்றால் இந்த வங்கி வெகு காலமாக போராடி வருவதாகவும், இந்த வங்கியின் புதிய முதலாளி நோயல் க்வின், செலவினைக் குறைப்பதற்காக, பல நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 10,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் அதிகளவில் ஊதியம் பெறும் ஊழியர்களை குறி வைத்து இந்த பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆசியாவில் இரட்டை இலக்க வருவாய்
 

ஆசியாவில் இரட்டை இலக்க வருவாய்

ஆசியாவில் இரட்டை இலக்க வருவாயை பெற்ற போதிலும், இந்த வங்கியில் அதிகப்படியான ஊழியர்கள் ஐரோப்பாவில் தான் உள்ளனர் என்றும், ஐரோப்பாவை விட ஆசியாவில் ஊழியர்கள் குறைவுதான் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இந்த வங்கி 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என்றும் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த வங்கியின் முதல் பாதி ஆண்டில் நிகரலாபம் 18.6 சதவிகிதம் அதிகரித்து, 8.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கு நஷ்டம்

வங்கிகளுக்கு நஷ்டம்

ஹெச்.எஸ்.பி.சி மட்டும் அல்ல, உலகெங்கிலும் பல வங்கிகள் இப்படிதான். உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், மத்திய வங்கிகள் வட்டி குறைப்பை செய்வதால், வங்கிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறைக்கிறது. குறைந்த வட்டி விகிதங்களால் வங்கிகளுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய வருவாய் ஆன வட்டி வருவாய் என்பது குறைகிறது. மேலும் தங்களின் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க, வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்களை அதிகமாக தருவதாக கூறி இழுக்கின்றன. இந்த வகையில் வரவு குறைவு என்றாலும், செலவினங்களே அதிகம். இந்த நிலையில் இந்த வங்கிகள் செலவினை குறைப்பதற்காக இப்படியொரு முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயதுக்கு ஆளாகின்றன.

உலகெங்கிலும் இப்படி தான்

உலகெங்கிலும் இப்படி தான்

இந்த நிலையில் தான் கடந்த மாதம் ஜெர்மனியின் மிகப்பெரிய வங்கியான காமர்ஸ் பேங்க் 4,300 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதவிர 200 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது. இதில் வேடிக்கை என்னவெனில் இதன் பணியாளர்களில் பத்தில் ஒரு பகுதியினரை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஜெர்மனியை சேர்ந்த டாய்ச் வங்கி 18,000 பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், இதே பிரான்ஸ் சொசைட்டி ஜெனரல் 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் முன்னரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic crisis: HSBC planning to around lay off 10,000 staffs

HSBC planning to around lay off 10,000 staff, and many of world banks are decided to lay off for Economic problem
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X