நீடிக்கும் மந்த நிலை.. தொடர்ந்து உற்பத்தி குறைப்பு.. கவலையில் மாருதி சுசூகி ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

தொடர்ந்து கார் உற்பத்தியை குறைக்கும் பெரு நிறுவனங்கள் | Maruti Suzuki Cuts Production for 8th Month

டெல்லி : ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் மந்த நிலையால், பெருத்த அடி வாங்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மாருதி சுசூகியும் ஒன்று.

அந்த வகையில் தற்போது தொடர்ந்து எட்டாவது மாதமாக அதன் உற்பத்தியை குறைத்துள்ளது மாருதி சுசூகி. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி 17.48% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் மந்த நிலை.. தொடர்ந்து உற்பத்தி குறைப்பு.. கவலையில் மாருதி சுசூகி ஊழியர்கள்!

நீடித்து வரும் மந்த நிலையால் விற்பனை என்பது பெரிய அளவில் சரிந்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,32,199 வாகனங்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,60,219 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி 33.99 சதவிகிதம் குறைக்கப்பட்டு 1,11,370 யூனிட்களாகவே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டாய்ச் வங்கி.. கதறும் ஊழியர்கள்!18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டாய்ச் வங்கி.. கதறும் ஊழியர்கள்!

இதே சிறிய ரக கார் மற்றும் காம்பாக்ட் கார்கள், குறிப்பாக ஆல்டோ, நியூவேகன், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட் மற்றும் பலேனோ, டிசையர் உள்ளிட்ட கார்கள் 14.91% குறைத்து, 98,337 யூனிட்கள் மட்டுமே செப்டம்பரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 1,15,576 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே நடுத்தர அளவு செடான் சியாஸ் வெறும் 2,350 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும், இதே கனரகம் அல்லாத வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் 1,935 யூனிட்கள் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாருதி கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதமே உற்பத்தியை குறைக்க அதன் உற்பத்தி ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி மொத்த விற்பனை 24.4% குறைந்து 1,22,640 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இதே கடந்த ஆண்டு 1,62,290 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் இந்த மந்த நிலையானது, மாருதி சுசூகி இந்தியா மட்டும் அல்லாது, ஹூண்டாய், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களையும் வெகுவாக பாதித்துள்ளது. மேலும் இந்த விற்பனை சரிவால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை தொடர்ந்து பல மாதங்களாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டாடா மோட்டார்ஸ் கடந்த செப்டம்பர் மாதத்தில் தனது பயணிகள் வாகன விற்பனையை 63 சதவிகிதம் குறைத்து, 6,976 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 18,855 யூனிட்களாக உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki again cuts production in last September month

Maruti Suzuki cuts production in last September month, and its September month car sales also down in 24.4% to 1,22,640 units
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X