பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : வழக்கமாக எல்லா நிபுணர்களும் பொருளாதார வீழ்ச்சி மந்தநிலை, வேலையிழப்பு, வேலையின்மை, பணவீக்கம் என்பது குறித்து எச்சரிக்கை செய்து வந்தாலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் எச்சரிப்பு என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

ஏனெனில் இந்திய பொருளாதாரத்தினை பற்றி நன்கு அறிந்த இவர், ஏற்கனவே நலிந்து வரும் இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரித்திருந்தாலும், தற்போது மீண்டும் கவலை கொள்ளும் விதமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்தியாவின் நடப்பு நிதி பற்றாக்குறை மிக கவலை அளிப்பதாகவே கூறியுள்ளார். இது இந்திய பொருளாதாரத்தின் பின்னணியில் இருக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த தவறியதாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

பிரவுன் பல்கலைக் கழத்தில் சொற்பொழிவு
 

பிரவுன் பல்கலைக் கழத்தில் சொற்பொழிவு

பிரவுன் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய ரகுராம் ராஜன், இந்தியாவை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நிச்சயமற்ற தன்மையே இந்திய பொருளதாரம் மந்தமடைவதற்கு ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் நிதி நெருக்கடி முந்தைய ஆண்டுகளில் இருந்து கணிசமான சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக 2016ம் ஆண்டின் முதல் காலாண்டில் 9 சதவிகித வளர்ச்சியிலிருந்து சரிந்து வருகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

கடுமையான நெருக்கடி

கடுமையான நெருக்கடி

தற்போது நாடு கடுமையான நெருக்கடியையும் சந்தித்துள்ளது. அதுவும் சில மதிப்பீடுகள் பெரிய அளவில் சரிந்துள்ளன. அதிலும் கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்த உற்பத்தி வளர்ச்சியானது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், இது அடுத்த காலாண்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கவலை கொள்ளும் விதமாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய பிரச்சனையே இதுதான்

இந்தியாவின் முக்கிய பிரச்சனையே இதுதான்

இது போன்ற விஷயங்களை இன்னும் மோசமாக்க, கடந்த ஆக்ஸ்ட் மாத தொழில்துறை உற்பத்தி ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்மறையான வீழ்ச்சி கண்டுள்ளது. இது வெறும் 1.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் முக்கிய பிரச்சனையே இது தான், அது என்னவென்றால் புதிய வளர்ச்சிக்கான ஆதாரங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

பொருளாதார மந்தநிலைக்கு இது தான் காரணம்
 

பொருளாதார மந்தநிலைக்கு இது தான் காரணம்

நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குறிப்பாக ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணங்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தான் இந்திய பொருளாதாரத்தில் முதுகெலும்பை உடைத்ததாகவும் தோன்றுகிறது, ஏனெனில் இந்திய பொருளாதாரம் பலவீனமான நிலையில் தான் இந்த நடவடிக்கைகள் வந்ததாகவும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பொது நலனில் கவனம்

பொது நலனில் கவனம்

மோடி அரசு வளர்ச்சியை உயர்த்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்துவதை விட, பொது நலனில் தான் அதிக கவனம் செலுத்தியது என்றும் ராஜன் கூறியுள்ளார். அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் உற்சாகப்படுத்தப்பட்டாலும், வருவாய் பாதிப்பு உள்ள இந்த நிலையில் ஏன் ஏற்படுத்தப்பட்டன என்றும் ரகுராம் ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். இவர் தவிர பல பொருளாதார நிபுணர்களும் வல்லுனர்களும் இதையே எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சூழலுக்கு ஏற்றவாறு அரசு உண்மையை ஏற்று, அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், இந்த அரசாங்கம் ஒரு இனிமையான நம்பிக்கையான சூழலில் வாழும் என்றும் ராஜன் கூறியுள்ளார். ராஜன் மட்டும் அல்லாது உலக வங்கி, மற்றும் பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களும், உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் இதையே கூறி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி என்பது வெறும் 6% சதவிகிதமாகவே இருக்கும் என்றும், இந்த வீழ்ச்சியானது, தற்போது மட்டும் அல்ல, அடுத்த காலாண்டிலும் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raguram Rajan said demonetisation and GST have broken the Indian economy's back

Raguram Rajan said demonetisation and GST have broken the Indian economy's back, and he expressed concern over India's fiscal deficit figures,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X