ஸ்விக்கி அதிரடி.. 3 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அடுத்த 18 மாதங்களில் 3 லட்சம் பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக சரிவர வேலை இல்லை என பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிலையில், ஸ்விக்கி இப்படியொரு அறிவிப்பை அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் பெரு நகரங்களின் மட்டுமே தனது ராஜ்ஜியத்தை நடத்தி வந்த இந்த நிறுவனம், தற்போது பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையிலேயே இப்படி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகளவிலான ஊழியர்கள்

அதிகளவிலான ஊழியர்கள்

இதன் மூலம் தற்போதுள்ள தனது ஊழியர்காளின் பலத்தோடு சேர்த்தது 5 லட்சம் ஊழியர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்விக்கி நாட்டின் மூன்றாவது பெரிய முதலாளியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஜிகாபைட்ஸ் என்ற வருடாந்திர தொழில் நுட்ப மாநாட்டில் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீ ஹர்ஷா மஜெட்டி, எங்கள் மதிப்பீடுகள் தொடர்ந்தால், நாட்டில் தொடர்ந்து மூன்றாவது பெரிய வேலைவாய்ப்பு ஆதாராமாக நாங்கள் இருப்போம் என்றும், இதற்கு முன்னாள் ராணுவம் மற்றும் ரயில்வே துறையில் தான் அதிகளவிலான பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்விக்கியில் எத்தனை ஊழியர்கள்

ஸ்விக்கியில் எத்தனை ஊழியர்கள்

அதிலும் கடந்த மார்ச் 2018வுடன் முடிவடைந்த காலத்தில் இந்திய ராணுவத்தில் 12.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதே இந்திய ரயில்வேயில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது. இதே தகவல் தொழில் நுட்ப துறையில் முக்கிய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் கூட 4.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், ஸ்விக்கி தனது ஊழியர்கள் விகிதத்தை 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என்றும், அவ்வாறு உயர்த்தினால் டிசிஎஸ்ஸை விட அதிகரித்து காணப்படும் என்றும் ஸ்விக்கி கூறியுள்ளது.

ஸ்விகியில் நீல காலர் வேலை
 

ஸ்விகியில் நீல காலர் வேலை

இந்த 3 நிறுவனங்கள் ஊழியர்களின் நலன்களையும், முழு நேர வேலைவாய்ப்பையும் வழங்கி வரும் நிலையில், ஸ்விக்கி நீல காலர் வேலைகளையும் வழங்கும் என்றும் கூறியுள்ளது. (அதென்ன நீல காலர் வேலை என்பது பணியினை பொறுத்து ஊதியம் பெறும் ஊழியர்கள் ) மேலும் இந்த டெலிவரி நிறுவனம் ஏற்கனவே 2.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு முன்பாக நுழைந்த டெலிவரி பணியாளர்களை கூட ஸ்விக்கி டெலிவரி பாட்னராக கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்விகியின் இலக்கு

ஸ்விகியின் இலக்கு

இதே ஸ்விக்கிக்கு போட்டியாளரான சோமேட்டோவில் கூட 2.3 லட்சம் டெலிவரி பணியாளர்கள் உள்ளனர். இதே பிளிப்கார்டில் 1 லட்சம் டெலிவரி நிர்வாகிகள் உள்ளனர் என்றும் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளன. மேலும் அடுத்த 10 - 15 வருடங்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை, ஒவ்வொரு மாதமும் 15 முறை மேடையில் பரிவர்த்தனை செய்வதையே ஸ்விக்கி இலக்காக கொண்டுள்ளது என்றும் மேஜெட்டி கூறியுள்ளார்.

இவ்வளவு தான் வர்த்தகம்

இவ்வளவு தான் வர்த்தகம்

இந்த நிலையில் ஸ்விக்கி தற்போது 500 நகரங்களில் சுமார் 3.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெலிவரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது சுமார் ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் ஆர்டர்களை பெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் நாஸ்பர்ஸ் என்ற அதன் மிகப்பெரிய முதலீட்டாளர் கிளவ்டு கிச்சன் வர்த்தகம் என இத்துறையில் மிகப்பெரிய விரிவாக்கம் செய்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: swiggy ஸ்விக்கி
English summary

Swiggy planned to hire three lakh people in next 18 months

Swiggy planned to hire three lakh people in next 18 month and its expanding services and cloud kitchen in some countries.
Story first published: Sunday, October 20, 2019, 12:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X