டெல்லி: மஹாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தல் காரணமாக உள்நாட்டு பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறையளிக்கப்பட்டுள்ளன.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஆக்ஸிஸ் வங்கி, பாரதி இன்ஃப்ராடெல், இந்துஸ்தான் ஜிங்க், ஜஸ்ட் டயல், பிரமல் எண்டர்பிரைசஸ், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று இந்திய பங்கு சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த ஆறு வர்த்தக நாட்களிலும் உயர்ந்து வந்த உள்நாட்டு குறியீடுகள், மீண்டும் செவ்வாய்கிழமை வழக்கம் போல வர்த்தகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கும் சட்டடபை பொதுத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகாவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும், இதே ஹரியானாவில் 90 தொகுதிகளிலும் இந்த வாக்கெடுப்பானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது என்றும், இந்த தேர்தலில் 4,400 வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும், இதில் ஹரியானாவில் 1,169 பேரும், இதே மகாராஷ்டிராவில் 3,237 பேரும் வேட்பாளர்களாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய சந்தைகள் இன்று விடுமுறையாக இருந்தாலும், மற்ற உலக நாடுகளின் சந்தை பெரும்பாலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் இந்திய பங்கு சந்தைகள் இந்திய ரூபாய் மதிப்பு, பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இவற்றை பொறுத்து செவ்வாய் கிழமையன்று பெரும் அளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்கு சந்தைகள் சற்றும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 246 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,298 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 75 புள்ளிகள் ஏற்றத்துடன் 11,661 ஆகவும் முடிவடைந்திருந்