Ease of Doing Business-ல் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா! இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும், உலக அளவில் வியாபாரம் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலைத் தயாரித்து வெளியிடுகிறது. 2020-ம் ஆண்டுக்கான இந்த World Bank's Ease of Doing Business 2020 survey தற்போது வெளியாகி இருக்கிறது. 190 உலக நாடுகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த, உலக வங்கியின் ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ் 2020 கணக்கெடுப்பில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி இருக்கிறது.

ஆக, மொத்த 190 நாடுகளில் 63 வது இடத்தைப் பிடித்து உள்ளது நம் இந்தியா. பெரிய அளவில், இந்த தரப்பட்டியலில் முன்னேறிய டாப் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் குறிப்பிட்டு இருக்கிறது உலக வங்கி. உலக வங்கியின் இந்த தர வரிசையில் நல்ல உயரத்தைப் பிடித்திருக்கும் இந்தியா, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்தின் சீர்திருத்தவாத சான்றுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் தடுமாறிக் கொண்டு இருக்கும் சீனாவுக்கு, மாற்று வழிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, இந்த தரப் பட்டியல் முன்னேற்றத்தால் ஈர்க்க உதவக்கூடும் எனவும் சொல்கிறார்கள்.

Ease of Doing Business-ல் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா! இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது..?

கடந்த ஆண்டு இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77 வது இடத்தை எட்டியது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. மோடி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் தரவரிசை 79 இடங்கள் முன்னேறி இருக்கிறது. உலக வங்கியின் எளிதில் வியாபாரம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா, 2014 ல் 142-வது இடத்தில் இருந்தது. இப்போது 2019-ல் 63-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

தட்டித் தூக்கிய L&T..! ஆனாலும் ஒரு குட்டி சிக்கல்..!தட்டித் தூக்கிய L&T..! ஆனாலும் ஒரு குட்டி சிக்கல்..!

1. கட்டிடம் அனுமதி பெறும் செயல்முறையை இந்தியா எளிதிலும் விரைவாகவும் கிடைக்கச் செய்தது.
2. ஒரு கிடங்கைக் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் அங்கீகாரங்களையும் பெறுவதற்கு, கிடங்கைக் கட்டுவதற்கான மொத்த செலவில் 5.7 % செலவாகிக் கொண்டிருந்ததை 4 % செலவாக குறைத்தது.
3. கூடுதலாக, Professional Certification requirement வழியாக டெல்லியில் கட்டிட தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்தி இருப்பது.
4. எல்லா டாக்குமெண்டுகளையும் ஆன்லைனிலேயே சமர்பிப்பது போன்ற அரசின் ஆன்லைன் சேவைகளால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எளிதாகி இருப்பது மற்றும் சர்வதேச வியாபாரங்களுக்கு பெரிதும் பயன்படும் துறைமுகங்களில் அடிப்படைக் கட்டுமான வசதிகளை மேம்படுத்தப்படுவது போன்ற 4 காரணங்களை மிக முக்கியமாக குறிப்பிட்டு இருக்கிறது உலக வங்கி.

எப்படியோ இந்தியா உலகின் எளிதாக வியாபாரம் செய்யப்படும் நாடுகள் பட்டியலில் 63-வது இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India 63rd place in World Banks ease of doing business ranking

India 63rd place in World Banks ease of doing business ranking. India's rank jumps 14 places comparing to last year ranking. In modi regime 79 places improved.
Story first published: Thursday, October 24, 2019, 13:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X