இன்ஃபோசிஸ் புகார் மீது நடவடிக்கை..! அமெரிக்க பங்கு & பரிவர்த்தனை ஆணையம் விசாரணை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதே, சிலர் முறைகேடு புகார் கொடுத்து இருந்தார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் முதன்மை நிதி அதிகாரி ஆகியோர்கள் அழுத்தம் கொடுத்து கணக்கு வழக்குகளை மாற்றி எழுதி, நிறுவனத்தின் லாபத்தை உயர்த்திக் காட்டுகிறார்கள் என்பது தான் புகார்.

 

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவின் பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) தன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறதாம்.

 
இன்ஃபோசிஸ் புகார் மீது நடவடிக்கை..! அமெரிக்க பங்கு & பரிவர்த்தனை ஆணையம் விசாரணை..!

"இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது புகார் எழுந்த போதிலிருந்தே, அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்துடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம். அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது எழுந்த புகாருக்கு, தன் தரப்பில் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்" என இன்ஃபோசிஸ் நிறுவன தரப்பே முன் வந்து சொல்லி இருக்கிறார்கள். அதோடு, இன்ஃபோசிஸ் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ்.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவின் பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீதான புகார் தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டிருக்கிறார்களாம். செபி அமைப்பு கேட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் முறையாக கொடுக்க இருப்பதையும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்களாம்.

இதெல்லாம் போக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது எழுந்த புகாரின் அடிப்படையில், அமெரிக்க நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதும், தங்களுக்கு தெரியும் என இன்ஃபோசிஸ் தரப்பு வெளியிட்ட ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்கள். இந்த வழக்கை இன்ஃபோசிஸ் நிறுவனம் கடுமையாக எதிர் கொள்ள இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு என்ன கெட்ட காலமோ தெரியவில்லை. வந்த ஒரு முறைகேடு புகாரினால் அடுத்து அடுத்து பிரச்னைகள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. எல்லா வழக்குகள் மற்றும் விசாரணைகளில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு, தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது இன்ஃபோசிஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Securities and Exchange Commission (SEC) has initiated an investigation against infosys

US Securities and Exchange Commission (SEC) has initiated an investigation against infosys based on the whistle blowers complaint about accounts fraud.
Story first published: Thursday, October 24, 2019, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X