மீண்டும் சிக்கலில் ஜான்சன் அண்ட் ஜான்சன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமீபத்தில் தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரு பெரிய வழக்கில் சிக்கி சுமார் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு எல்லாம் செலுத்தச் சொன்னது நீதிமன்றம். இப்போது மீண்டும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் கேன்சர் நோயை வரவைக்கும், சில ரசாயனங்கள் இருப்பதாகச் சொல்லி அமெரிக்க அரசும், இந்திய அரசும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன விசாரணையில் களம் இறங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பேட்ச்சில் இருக்கும் டால்கம் பவுடர்களில் "chrysotile asbestos" என்கிற கேன்சர் நோயை வரவழைக்கக் கூடிய ரசாயனங்கள் 0.00002 சதவிகிதம் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையான எஃப் டி ஏ (FDA - Food and Drug Administrator) கண்டு பிடித்தது. எனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தன்னுடைய அந்த குறிப்பிட்ட பேட்ச் டால்கம் பவுடர்களை திரும்ப அழைத்து இருக்கிறது.

மீண்டும் சிக்கலில் ஜான்சன் அண்ட் ஜான்சன்..!

 

அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களில் ஏற்பட்ட இந்த சிக்கலை கருத்தில் கொண்டு இந்தியாவில் மருந்துகளை நெறிமுறைப்படுத்தும் ஆணையமும் களத்தில் இறங்க இருக்கிறதாம். அதாவது ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடர்களில் உண்மையாகவே கேன்சர் நோயை வரவழைக்கும் ரசாயனங்கள் இருக்கிறதா என விசாரிக்கப் போகிறார்களாம். இதற்கு அமெரிக்காவின் எஃப் டி ஏ அமைப்பின் உதவியையும் நாடி இருக்கிறார்களாம்.

7 பில்லியன் டாலர் இழந்த அமேசான் ஓனர்..! மீண்டும் நம்பர் 1 ஆன பில் கேட்ஸ்..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் இந்த டால்கம் பவுடர் பாதுகாப்பானது தானா..? போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் வைத்திருக்கிறதா..? என உறுதி செய்து கொள்ள மத்திய சுகாதாரத் துறை விரும்புகிறதாம். இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைக் குறித்து விசாரிக்க இருப்பதாக ஒரு துறை சார்ந்த உயர் அதிகாரியும் சொல்லி இருக்கிறாராம்.

இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்த டால்கம் பவுடர் சிக்கலைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர்களில் ethylene oxide என்கிற கேன்சரை வரவழைக்கும் ரசாயனங்களைக் கொண்டு ஸ்டெர்லைஸ் செய்ததற்கான உரிமங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதன் பின், அரசு தரப்பை எதிர்த்து நீதிமன்றங்களில் போராடி தான், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், மீண்டும் தன் டால்கம் பவுடர்களைத் தயாரிக்க அனுமதி வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Johnson and Johnson is in trouble again due to cancer causing chemical inits talcum powder

Johnson and Johnson is in trouble again due to cancer causing chemical inits talcum powder. The level of chrysotile asbestos in a particular lot was measured at 0.00002%, according to the FDA.
Story first published: Friday, October 25, 2019, 17:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X