இண்டர்நெட் வர்த்தகத்தில் பிளிப்கார்ட்டுக்கு 40% நஷ்டமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சில்லறை வர்த்தக பிரிவில் கொடிகட்டி பறக்கும் பிளிப்கார்ட் நிறுவனம், இண்டர்நெட் வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தினையே கண்டுள்ளது.

இந்த நிலையில் இந்த துறையில் இந்த நிறுவனம் கடந்த மார்ச் 2019ம் நிதியாண்டில் 40 சதவிகித நஷ்டத்தினை கண்டுள்ளதாகவும், எனினும் நடப்பு ஆண்டில் 30 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் இதற்காக இந்த நிறுவனத்தின் புதிய பங்காளரான வால்மார்ட் நிறுவனம் மேலும் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கடந்த 2019ம் ஆண்டில் இண்டர்நெட் துறையில் அதன் செயல்பாட்டு வருவாய் 51 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.

முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

வருவாயை அதிகரிப்பதே இலக்கு

வருவாயை அதிகரிப்பதே இலக்கு

அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை, 16 பில்லியன் டாலருக்கு கடந்த ஆகஸ்ட் 2018ல் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த நிறுவனம் தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதே இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடன் அளவு குறைந்து இழப்புகளை குறைத்துள்ளது என்றும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட கடன் மற்றும் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினருடன் மட்டுமே வர்த்தகம் செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

மொத்த வருவாயில் குறிப்பிட்ட பங்கு

மொத்த வருவாயில் குறிப்பிட்ட பங்கு

இந்த நிலையில் இந்த நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வருவாயில் இணைய வருவாய் பெரும் பங்கு வகிப்பதாகவும், குறிப்பாக பிளிப்கார்ட் இணைய வருவாய் 1,983 கோடி ரூபாயாக இருப்பதாகவும், இதே லாகிஸ்டிஸ்க் கட்டணங்கள் 996 கோடி ரூபாயாக அதிகரிப்பதாகவும், இதே புரோமோட்டிங் வருவாய் 576 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

செலவினங்கள் அதிகரிப்பு

செலவினங்கள் அதிகரிப்பு

இதே சம்பளம் மற்றும் பணியாளர் பங்கு உரிமை திட்டம் 91 சதவிகிதம் அதிகரித்தும், 1,889 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், இதே செலவினங்கள் 56 சதவிகிதம் அதிகரித்து, 1,141 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இவற்றோடு ஒப்பிடும்போது பிளிப்கார்ட் இண்டர்நெட் துறையின் நிகரலாபம் 68 சதவிகிதம் அதிகரித்து, 377 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் நிகரலாபத்தை விட செலவினங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கை அடையலாம்

இலக்கை அடையலாம்

இந்த நிலையிலேயே வால்மார்ட் நிறுவனம் கடந்த 2019ம் நிதியாண்டில் வால்மார்ட் நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் டாலர் நஷ்டமாகியுள்ளதாகவும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவிலும் செயல்பட்டு வருவது கவனிக்கதக்கது.

அதிலும் கடந்த தீபாவளி பண்டிகை சீசனையொட்டி இந்தியாவில் இந்த நிறுவனம் மேற்கொண்ட சில்லறை விற்பனை மேளாவில் முதலிடத்தில் உள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் இணைய சேவை அதிகரித்து வரும் நிலையில், இணைய துறையிலும் குறிப்பிட்ட இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart internet segment marked up 40 percent loss in March 2019 fiscal year

Flipkart internet segment marked up 40 percent loss in March 2019 fiscal year, but its trim loss 30 % in after a year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X