ஆட்டோமொபைல் துறைக்கு இது நல்ல காலம் தான்.. இனியும் விற்பனை அதிகரிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரின் நம்பிக்கையும் இந்த பண்டிகை சீசனில் விற்பனை களைகட்டும் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களின் எதிப்பார்ப்பு போலவே கார் விற்பனையாது இந்த விழாக்கால சீசனில் 5 - 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டும்மொத்த துறையும் நலிவடைந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் விற்பனையை ஊக்குவிக்க பல அதிரடியான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கி வந்தனர். இதற்கிடையில் தான் இப்படி ஒரு அதிகரிப்பு என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த அதிரடியான சலுகைகளும், தள்ளுபடிகளும் வீண்போகவில்லை என்றே கூறலாம்.

விழாக்கால விற்பனை
 

விழாக்கால விற்பனை

குறிப்பாக நவராத்திரி, தசரா மற்றும் தண்டேராஸ் உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி, வாகனத்துறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கார் விற்பனை 5 - 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் விற்பனை ஒரு இலக்கத்திலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த விழாக்கால பருவத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த நிறுவனங்களின் அதிக விற்பனை

இந்த நிறுவனங்களின் அதிக விற்பனை

இந்த விழாக்கால சலுகை தள்ளுபடியில் முன்னணி கார் உற்பத்தியாளர்களான மாருதி சுசூகி 7 - 10 சதவிகித விற்பனை அதிகரிப்பும், இதே ஹூண்டாய் நிறுவனம் 10 சதவிகித வளர்ச்சியும் கொண்டுள்ளன. இந்த வளர்ச்சியானது நவராத்திரி மற்றும் தசரா, தண்டேராஸ் காலத்தில் இருந்ததாகவும், அதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இரு மடங்கு இலக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் மொத்த சந்தை வளர்ச்சியில் மேற்கூறிய இரு நிறுவனங்களும் 65 - 70 சதவிகிதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மகேந்திராவுக்கு அதிர்ஷ்டமே

மகேந்திராவுக்கு அதிர்ஷ்டமே

குறிப்பாக வாகன விற்பனையில் மிகவும் பின் தங்கியிருந்த மகேந்திரா நிறுவனம், இந்த பண்டிகை காலத்தில் பயன்பாட்டு வாகன விற்பனை 100 சதவிகிதம் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே மாருதி சுசூகியை பொறுத்த வரை நவராத்திரி முதல் தசரா வரையிலான 10 நாட்களில் 60,000 கார்கள் டெலிவரி செய்துள்ளதாகவும், இதே ஹூண்டாய் இதே காலத்தில் 25,000 கார்களை டெலிவரி செய்ததாகவும் கூறப்படுகிறது.

தண்டேராஸ் காலத்தில் விற்பனை
 

தண்டேராஸ் காலத்தில் விற்பனை

இதே தண்டேராஸ் காலத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 45,000 கார்களை டெலிவரி செய்ததாகவும், இதே ஹூண்டாய் நிறுவனம் 14,000 கார்களை டெலிவரி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் மாருதி சுசூகியின் மார்கெட்டிங் எக்ஸ்கியூடிவ் தலைவர் சஷாங் ஸ்ரீ வாஸ்தவா கடந்த ஆண்டினை போலவே இந்த விழாக்கால பருவத்திலும் விற்பனை இருந்ததாகவும், எனினும் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்றும் கூறியுள்ளார்.

விழாக்கால பருவத்தில் விற்பனை இருமடங்காகும்

விழாக்கால பருவத்தில் விற்பனை இருமடங்காகும்

பொதுவாக ஆண்டின் மற்ற சாராசரி காலத்தினை விட, நவராத்திரி மற்றும் தசரா காலத்தில் விற்பனை இருமடங்காகும் என்றும், அதிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர விற்பனை இரு மடங்காகும், குறிப்பாக விற்பனையில் பெரும்பகுதி வடக்கு மற்றும் கிழக்கில் அதிகமாக இருக்கும் என்றும், அதிலும் மொத்த விற்பனையில் 50 - 55 சதவிகிதம் என்றும், பண்டிகை கால மாத விற்பனை 3.5 - 4 மடங்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஹூண்டாய் 10% வளர்ச்சி

ஹூண்டாய் 10% வளர்ச்சி

இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை தலைவர் விகாஸ் ஜெயின், இந்த விழாக்கால பருவத்தில் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், அதிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுபோது சில்லறை விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், எனினும் கடந்த ஆண்டு அக்டோபர் 2018வுடன் ஒப்பிடுபோது இது 7- 8 சதவிகிதம் குறைவு தான் என்றும், எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் நகரம் மற்றும் சிறு நகரங்களில் இந்த விற்பனை வளர்ச்சி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சொகுசு கார்கள் விற்பனையும் அதிகரிப்பு

சொகுசு கார்கள் விற்பனையும் அதிகரிப்பு

மேலும் சொகுசு கார்களின் விற்பனையும் ஓரளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்த பண்டிகை சீசனில் பென்ஸ் கார்கள் 200 டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறிப்பாக மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் தனியாக செய்யப்பட்டுள்ளதாகவும், இதே நாடுமுழுவதிலும் தண்டேராஸ் சீசனில் 600 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதே பி.எம்.டபள்யூ, எஸ்.யு.வி மற்றும் எக்ஸ் 7 ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விற்பனை சரிவு நிறுத்தம்

விற்பனை சரிவு நிறுத்தம்

எனினும் இரு சக்கர வாகன நிறுவனங்களான ஹூரோ மோட்டோ கார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள், இந்த மாதத்தில் விற்பனை சரிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் தற்போது சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும் முக்கிய இரு சக்கர உற்பத்தியாளரான ஹூரோ மோட்டோ கார்ப் கடந்த பண்டிகை கால சீசனில் விற்பனை ஒரு இலக்கத்தில் மட்டும் இருந்ததாகவும், தண்டேராஸ் சீசன் முடிந்தால் தான் முடிவு என்ன என்று தெரிய வரும் என்றும் இந்த நிறுவனத்தின் விற்பனை துறை தலைவர் சஞ்சய் பான் கூறியுள்ளார்.

உண்மை நிலை என்ன?

உண்மை நிலை என்ன?

பண்டிகை காலத்தில் அதிக்கப்படியான தள்ளுபடி மற்றும் பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இச்சலுகைகளும் தள்ளுபடிகளும் இல்லாவிட்டால் விற்பனை எப்படி இருக்கும், உண்மையாகவே விற்பனை அதிகரித்துள்ளதா? சந்தை ஏற்றம் காண தொடங்கியுள்ளதா? என்பது அப்போது தான் தெரியவரும் என்றும் மாருதி சுசூகியின் தலைவர் ஏற்கனவே ஒர் அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian car sales 5- 7% up in this festival season

India car sales 5- 7% up in this festival season, particularly Maruthi suzuki India sees up 7 - 10% sales up and Hyundai up 10% in sales.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X