சொந்த வீடு வாங்க திட்டமா.. உஷார்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொந்த வீடு என்பது இந்திய மிடில் கிளாஸ் குடும்பத்தின் முக்கிய கனவாக இருக்கும் வேளையில், 2023 ஆம் ஆண்டில் புதிய வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ நீங்கள் திட்டமிட்டால் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி காத்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு முதல் இந்திய ரியல் எஸ்டேட் துறை மிகவும் சிறப்பான வளர்ச்சியை கண்டது மட்டும் அல்லாமல் பல லட்சம் பேர் குறைவான வட்டி விகிதம் மற்றும் அதிகப்படியான தள்ளுபடியில் கிடைக்கும் வீடுகளை மக்கள் வாங்கி குவித்தனர்.

இதற்கிடையில் 2022 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வால் சிறிய வீடுகளின் விற்பனை குறைந்துவிட்டாலும், ஆடம்பர் வீடுகளின் விற்பனை மிகவும் சிறப்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் உருவாகியுள்ள பிரச்சனை அனைத்து தரப்பினருக்கும் பெரும் பாதிப்பாக மாறியுள்ளது.

புது வீடு வாங்கினா கார் பரிசு.. அதும் டெஸ்லா கார்.. எந்த ஊரில் தெரியுமா? புது வீடு வாங்கினா கார் பரிசு.. அதும் டெஸ்லா கார்.. எந்த ஊரில் தெரியுமா?

2023 ஆம் ஆண்டு

2023 ஆம் ஆண்டு

2023 ஆம் ஆண்டில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக இருப்பது விலைவாசி உயர்வு தான், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை சூழ்நிலைகளால் பாதிப்புகளால் இந்தியாவில் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

 விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

இந்த நிலையில் விலைவாசி உயர்வு இந்திய ரீயல் எஸ்டேட் துறைகளையும் கடுமையாக பாதிக்க உள்ளது. இந்த நிலையில் 58 சதவீத ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இன்புட் செலவுகள் அதிகரிப்பதால் இந்த ஆண்டு வீட்டு விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கணித்துள்ளனர்.

வீட்டின் விலை

வீட்டின் விலை

அதே நேரத்தில் 32 சதவீத பில்டர்கள் வீட்டின் விலை நிலையானதாக இருக்கும் என்றும், 25 சதவீதம் வரை அதிகரிக்கும் எனவும் கணித்துள்ளனர். இன்புட் செலவுகள் என்பது கட்டுமான பொருட்கள் விலை, கட்டுமான ஊழியர்களின் செலவுகளை என அனைத்தும் இதன் மூலம் பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆய்வு

ஆய்வு


ரியல் எஸ்டேட் தலைமை அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் கன்சல்டென்ட் நிறுனமான Colliers India மற்றும் சொத்து ஆராய்ச்சி நிறுவனமான Liases Foras ஆகியவை இணைந்து செய்த ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சென்டிமென்ட் சர்வேயின் படி இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

வீடுகளுக்கான டிமாண்ட்

வீடுகளுக்கான டிமாண்ட்

இதேபோல் 43 சதவிகித டெவலப்பர்கள் 2023 ஆம் ஆண்டில் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் 2022 ஆம் ஆண்டை போலவே நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், 31 சதவீசம் பேர் வீடுகளுக்கான டிமாண்ட் கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகரிக்கும் என கணித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் ஆய்வு

இந்தியா முழுவதும் ஆய்வு

ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சென்டிமென்ட் சர்வேயில் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 341 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பங்குபெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தாலும், வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

டாப்-7 நகரங்கள்

டாப்-7 நகரங்கள்

2022 ஆம் ஆண்டில் நாட்டின் டாப்-7 நகரங்களில் வீட்டு விற்பனை புதிய உச்சத்தை எட்டி 2014 ஆம் ஆண்டின் பதிவு செய்யப்பட்ட முந்தைய அதிகபட்ச அளவை தாண்டியுள்ளதாக Anarock தெரிவித்துள்ளது.

364,900 வீடுகள் விற்பனை

364,900 வீடுகள் விற்பனை

2022 ஆம் காலண்டர் ஆண்டில் இந்தியாவின் டாப்-7 நகரங்களில் சுமார் 364,900 வீடுகள் விற்பனையாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் டாப் 7 நகரங்களில் 236,500 வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் சுமார் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2023 Real Estate: Housing price may increase amid input cost, But wont housing demand wont fade

2023 Real Estate: Housing price may increase amid input cost, But wont housing demand wont fade
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X