இது வெறும் ட்ரைலர் தான்.. இனிமேல் தான் படமே இருக்கு..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் மக்கள் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான பணவீக்கத்தை அனுபவித்து வருகின்றனர். உணவு, வெப்பம், போக்குவரத்து மற்றும் தங்குமிடம் போன்ற மக்களின் அத்தியாவசியமானவை அனைத்தின் விலைகளும் அதிகரித்து வருகிறது.

இதுவே மோசமாக இருந்தாலும், இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை இந்த நிலைக்குத் தள்ளியது இரண்டு முக்கியமான விஷயம் கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர்.

கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின்பு சிறப்பான பணவீக்க அளவுகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் மூலம் கிடைக்கும் பலன் மொத்தமாகவும், திடீரெனவும் பாதிக்கப்பட்டது.

பணவீக்க இலக்கை மாற்ற வேண்டியதில்லை.. அக்டோபர் மாத பணவீக்கம் 7% கீழ் குறையலாம்.. RBI ஆளுநர்..! பணவீக்க இலக்கை மாற்ற வேண்டியதில்லை.. அக்டோபர் மாத பணவீக்கம் 7% கீழ் குறையலாம்.. RBI ஆளுநர்..!

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இதைச் சமாளிக்க உலக நாடுகளின் அரசுகள் மற்றும் மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தியும், அதிகப்படியான நிதி உட்செலுத்தல் மூலம் பொருளாதாரத்தைத் திவால் நிலைக்குக் கொண்டு செல்லாமல் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துள்ளது.

வர்த்தக அளவுகள்

வர்த்தக அளவுகள்

பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகளவில் உயர்த்திய நிலையில் வர்த்தக அளவுகள் பெரிய அளவில் குறைந்த நிலையில் சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அதிகளவிலான கடனில் தவிக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த வட்டிவிகித உயர்வால் கூடுதலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

பணிநீக்கம்
 

பணிநீக்கம்

இதன் சங்கிலித் தொடர் பாதிப்பால் போதுமான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற முடியாத நிறுவனங்கள் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து வருகிறது. இது வேலைவாய்ப்புகளையும், b2b வர்த்தகத்தையும், உற்பத்தி என அனைத்தையும் அடுத்தடுத்து பாதித்து வருகிறது.

ரஷ்யா, சீனா

ரஷ்யா, சீனா

இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரம் இயங்க முக்கிய அச்சானியாக இருக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஜனவரி முதல் சந்தைக்கு வருவதை மொத்தமாகப் பாதிக்கப்பட உள்ளது. இதேபோல் உலகின் உற்பத்தி இன்ஜினாக இருக்கும் சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்றுப் பாதிப்பு இருக்கும் காரணத்தால் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தேவை உருவாகியுள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இதனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு மீண்டும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிப் முதல் பின் வரை உலக நாடுகள் சீனாவை நம்பியிருக்கும் நிலையில் சீனா மீண்டும் லாக்டவுனில் மூழ்கினால் பெரும் பிரச்சனை வெடிக்கும்.

தைவான், இந்தியா

தைவான், இந்தியா

சீனா தைவான் உடனும், இந்தியா உடனும் எல்லையில் ராணுவத்துடன் பிரச்சனை செய்து வருகிறது. இதை எதிர்க சீன அரசியலிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி யாருக்கும் அதிகாரம் இல்லாத நிலையில் சீன பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது.

2023 எப்படி இருக்கும்

2023 எப்படி இருக்கும்

இந்த நிலையில் 2023 புதிய ஆண்டில் மத்திய வங்கிகளின் வேகமான வட்டி விகித உயர்வு மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும் மக்கள் மத்தியிலான டிமாண்ட் குறைந்து வர்த்தகத்திலும், ஜிடிபி வளர்ச்சியிலும் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.

 IMF அமைப்பு

IMF அமைப்பு

ஆனால் வருடத்தின் இறுதியில் உலகளாவிய பணவீக்கம் பல பிரச்சனைக்கு மத்தியில் 4.7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. IMF அமைப்பின் வழக்கமான அக்டோபர் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பல ஆண்டுகளில் இல்லாத இருண்ட ஒன்றாக இருந்தது உள்ளது என மோசமான நிலை இன்னும் வரவில்லை, 2023 பல நாடுகளை ரெசிஷனுக்குத் தள்ளப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2023 Will be worst; high inflation impacts drags many countries in recession

2023 Will be worst; high inflation impacts drag many countries in recession
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X