வெறும் 95 சதுரடி அறைக்கு ரூ.90,000 வாடகை.. எங்கே தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நாளுக்கு நாள் வாடகை தொகை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வெறும் 95 சதுர அடி கொண்ட அறைக்கு 23 வயது இளைஞர் ஒருவர் சுமார் 90000 ரூபாய் வாடகை தருவதாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் நியூயார்க் நகரை சேர்ந்தவர் என்பதும் அவருடைய அறை எப்படி உள்ளது என்பதையும் தற்போது பார்ப்போம்.

இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் எது? எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் எது? எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

95 சதுர அடி தங்கும் அறை

95 சதுர அடி தங்கும் அறை

நியூயார்க்கை சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞர் சலூனில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தங்குவதற்கு நியூயார்க்கில் அறை வாடகைக்கு தேடியபோது 95 சதுர அடி அறை மட்டுமே கிடைத்ததாகவும் அதற்கு வாடகை 1100 டாலர் செலுத்துவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 90,000 ரூபாய்க்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய அறை

சிறிய அறை

இந்த அறையை நான் முதலில் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அதே நேரத்தில் இந்த பகுதியில் எனக்கு தங்குவதற்கு அறை கண்டிப்பாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி அந்த அறையை நான் வாடகைக்கு எடுத்து கொண்டேன். சிறியதாக இருந்தாலும் அதை நமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும் திறன் இருந்தால் எவ்வளவு சிறிய அறையிலும் தங்கலாம் என்பதை இங்கு வந்த பிறகு உணர்ந்து கொண்டேன் என அலெக்ஸ் கூறியுள்ளார்.

குளியல் அறை இல்லை

குளியல் அறை இல்லை

இந்த அறையை பொருத்தவரை ஒரு அலமாரி என்றுதான் அழைக்க வேண்டும். அந்த அளவுக்கு இது சிறிய அறை. மேலும் இந்த குடியிருப்பில் குளியலறை இல்லை. அதற்கு பதிலாக இந்த கட்டிடத்தில் உள்ள மூன்று பொது குளியலறைகளில் ஒன்றைத்தான் நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் தான் சமையலறை

ட்ரெஸ்ஸிங் டேபிள் தான் சமையலறை

அதேபோல் என்னுடைய அறையில் சமையல் அறை என தனியாக இல்லை. என்னுடைய மின்சார அடுப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்துதான் நான் சமையல் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட கல்லூரி விடுதியில் தங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சிக்கனம்

சிக்கனம்

இந்த அறை சில நேரங்களில் எனக்கு வசதியாகவும் உள்ளது. இந்த அறையில் தங்கியிருக்கும் நான் எந்தவித ஆடம்பர பொருட்களையும் வாங்க முடியாது. ஏனென்றால் அந்த பொருளை வைப்பதற்கு இடம் இல்லை என்பதால் நான் சிக்கனமாக செலவு கொள்கிறேன். என்னுடைய ஆடைகள் மற்றும் முடிதிருத்தும் கருவிகளை வைப்பதற்கும் தூங்குவதற்கும் ஒரு இடம் இருந்தால் போதும் என்பதால் தான் நான் இந்த அறையில் தங்கி இருக்கிறேன் என்று அலெக்ஸ் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் வாடகை

நியூயார்க் நகரில் வாடகை

உலகின் பிசியான நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரில் தற்போது வாடகை நாளுக்கு நாள் வாடகை அதிகரித்து வருவதாகவும் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர். நியூயார்க்கில் அறை வாடகை எடுத்து தங்குவது என்பது இளைஞர்களுக்கு ஒரு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

23 years old youth pay 1100 USD per month for only 95 sq ft flat in NewYork

23-year-old youth pays nearly 1500 USD rent per month for a 95 sq ft flat in New York. The barber, bike messenger, and content creator found the flat listed on the internet and saw the space only in photos before moving in.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X