அய்யோ இது மட்டும் நடந்திட கூடாது.. இந்திய மக்கள் பீதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும் அடுத்தடுத்து பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய நிறுவனங்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து முக்கியமான ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் நான்கு பேரில் ஒவ்வொருவரும் பணிநீக்கம் குறித்த அச்சத்தில் இருப்பதைதான் தனது வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற பீதியில் இருப்பதாாகவும், அதே நேரத்தில் நான்கில் மூன்று பேர் பணவீக்கம் அதிகரித்து வருவதைப் பற்றி அதிகப்படியாக கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆய்வில் பங்குப்பெற்றவர்களில் 50 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம் 2023 இல் வளரும் என்று நம்புகிறார்கள் என்று ஆய்வை மேற்கொண்ட மார்கெட்டிங் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் நிறுவனமான காந்தார் தெரிவித்துள்ளது.

Kantar ஆய்வு

Kantar ஆய்வு

இந்திய யூனியன் பட்ஜெட் குறித்த கணக்கெடுப்பின் இரண்டாவது பதிப்பில், Kantar வருமான வரி தொடர்பான கொள்கை மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. நான்கில் மூன்று பேர் பணவீக்கம் அதிகரித்து வருவதைப் பற்றி அதிகப்படியாக கவலைப்படுவதாக கூறப்படுவது இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது.

 வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

அதிலும் குறிப்பாக அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை தற்போதைய அளவான 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. இல்லையெனில் 80சி பிரிவு அளவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது 2வது கோரிக்கையாக இருக்கலாம்.

80சி பிரிவு
 

80சி பிரிவு

பட்ஜெட் வெளியிட சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வரையில் சந்தை நிலவரத்தின் படி அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவதோ, 80சி பிரிவின் சலுகையை விரிவாக்கம் செய்வதோ சாத்தியமில்லை.

 தனிநபர் வருமான வரி

தனிநபர் வருமான வரி

ஆனால் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளது, இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் பட்ஜெட் தாக்கல் செய்யும் பிப்ரவரி 1 ஆம் தேதி தான் உறுதி செய்ய முடியும்.

 மேக்ரோஎக்னாமிக்

மேக்ரோஎக்னாமிக்

மேலும் Kantar நிறுவனத்தின் ஆய்வின் படி மேக்ரோஎக்னாமிக் அளவில், பெரும்பாலானவர்கள் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பாசிடிவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். 2023 இல் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று 50 சதவீதம் பேர் நம்புகிறார்கள். மேலும் வெறும் 31 சதவீதம் பேர் மட்டுமே மந்த நிலைக்கு செல்லும் என நம்புகின்றனர்.

  பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

இருப்பினும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்பதால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடையாக மாறலாம். இதேவேளையில் இந்தியா ரெசிஷன் காரணமாக நேரடியாக பாதிக்காத மறைமுகவாகவே பாதிக்கும்.

பணவீக்கம்

பணவீக்கம்

இதோடு Kantar ஆய்வில் நான்கில் மூன்று பேர் அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பற்றி அதிகப்படியான கவலைப்படும் நிலையில் அதைச் சமாளிக்க மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்ஜெட்டில் இதுக்குறித்து அறிவிப்பு வெளியாக வேண்டும் என்றும் ஆய்வில் பங்கு பெற்று உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

25 percent Indian scared of layoff; 75 percent people worried about inflation says Kantar survey

25 percent Indian scared of layoff; 75 percent people worried about inflation says Kantar survey
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X