25 ஆண்டுகளாக வலுவான வருமானம்.. இந்த 6 ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த பணத்தை சரியான முதலீட்டில் முதலீடு செய்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சரியான ஃபண்ட்டை தேர்வு செய்து முதலீடு செய்தால் நம்முடைய பணம் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி நிலையான வருமானம் கிடைக்கும்.

அந்த வகையில் 25 ஆண்டுகளாக நல்ல வருமானம் கொடுத்து வரும் ஆறு சிறப்பான ஃபண்ட்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. கனரா ரோபெகோ ஈக்விட்டி டேக்ஸ் சேவர் ஃபண்ட்

1. கனரா ரோபெகோ ஈக்விட்டி டேக்ஸ் சேவர் ஃபண்ட்

இந்த ஃபண்ட் கடந்த 1993ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 29 ஆண்டுகளில் 15% ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. இது தொடக்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 15.04 சதவீத வருமானத்தை அளித்துள்ளதால் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய ஃபண்ட் ஆக மாறியுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல், 8 நிதி மேலாளர்கள் திட்டத்தை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிதி தற்போது விஷால் மிஸ்ரா மற்றும் ஸ்ரீதத் பந்தர்தார் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.

2. எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட்

2. எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட்

இந்த ஃபண்ட் 25 ஆண்டுகளுக்கு மேலான ஒரு பழமையான திட்டமாகும். இது கனரா ரோபெகோ ஈக்விட்டி டேக்ஸ் சேவர் ஃபண்டின் அதே நாளில் மற்றும் அதே ஆண்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த நிதி சற்று அதிக வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டம் 29 ஆண்டுகளில் 16.09% வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது.

3. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃபண்ட்
 

3. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃபண்ட்

இந்த ஃபண்ட் 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளில் 21.98% கவர்ச்சிகரமான வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டம் ஒரு காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்களின் விருப்பமாக இருந்தது. இதில் 25 ஆண்டுக்கு முன் லட்சத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

4. HDFC வரி சேமிப்பு ஃபண்ட்

4. HDFC வரி சேமிப்பு ஃபண்ட்

1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஃபண்ட், நீண்டகாலம் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்ட் 23.28% வருமானத்தை வழங்கியுள்ளது.

5. சுந்தரம் வரி சேமிப்பு ஃபண்ட்

5. சுந்தரம் வரி சேமிப்பு ஃபண்ட்

25 ஆண்டு பழமையான ஃபண்ட்களில் இதுவும் ஒன்று. இதில் முதலீடு செய்தவர்கள் சராசரியான 18.18% வருடாந்திர வருமானத்தை பெற்றுள்ளனர். நிதி ஆலோசகர்கள் பலர் பரிந்துரை செய்யும் ஃபண்ட்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

6. டாடா இந்தியா வரி சேமிப்பு ஃபண்ட்

6. டாடா இந்தியா வரி சேமிப்பு ஃபண்ட்

1996ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஃபண்ட் தொடக்கத்தில் இருந்து 18.45% வருடாந்திர வருமானத்தை வழங்குகிறது. மேலும் இந்த ஃபண்ட் பல ஆண்டுகளாக வருமானம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை

நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை

மேற்கண்ட 6 ஃபண்ட்கள் கடந்த 25 ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு சராசரியாக 12 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. எனவே நீங்களும் உங்களுடைய நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெற்று இதில் முதலீடு செய்து பயனடையுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

25 years completed 6 best ELSS funds give strong returns!

25 years completed 6 best ELSS funds give strong returns! | 25 ஆண்டுகளாக வலுவான வருமானம்.. இந்த 6 ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?
Story first published: Wednesday, September 28, 2022, 7:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X