டிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த இடத்தைப் பிடிக்கப் பல முன்னணி இந்திய நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளது. இதனால் டிக்டாக் திரும்பவும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தாலும் இப்பிரிவில் மிகப்பெரிய போட்டி உருவாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது.

 

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் குறைந்த காலத்திலேயே டிக்டாக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நாட்டின் சிறு குறு கிராமங்கள் வரையில் சென்றடைந்து பலரும் பிரபலம் அடைந்தனர். அதுமட்டும் அல்லாமல் நாட்டின் முன்னணி பிரபலங்கள் பலரும் டிக்டாக் மூலம் படத்திற்கு விளம்பரம் கொடுத்து மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கி வந்தனர்.

இப்படிப் புகழ் மற்றும் வர்த்தகத்தில் உச்சக்கட்ட நிலையில் இருக்கும் போது இந்திய அரசு 59 சீன செயலிகளின் பயன்பாட்டிற்குத் தடை விதித்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்ட இந்திய நிறுவனங்கள் இதேபோன்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா! கைகோர்க்கும் அமெரிக்கா!

வெற்றிடம்

வெற்றிடம்

இந்தியாவில் சீன நிறுவன செயலிகள் கிட்டதட்ட 2 முதல் 3 கோடி வாடிக்கையாளர்களை வைத்திருந்த நிலையில், தற்போது இந்தச் செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டு இத்துறையில் மிகப்பெரிய வெற்றிடம் உருவானது.

இதைக் கைப்பற்றவே தற்போது நாட்டின் 3 முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியா ஈகாமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், டிக்டாக்-இன் இடத்தை நிரப்புவதற்காக வீடியோ சோசியல் காமர்ஸ் தளத்தில் இறங்க முடிவு செய்து, மத்திய அரசின் தடைவிதித்த 2 நாளில் புதிதாக ஒரு செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

2GudSocial என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

Zee5
 

Zee5

நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான zee entertainment, Zee5 பிராண்ட் மூலம் தனது வர்த்தகம், சேவை அனைத்தையும் ஆன்லைனில் அதாவது OTT, டிஜிட்டல் பார்வையில் விரிவாக்கம் செய்து வரும் வேளையில், தற்போது சமுக வலைத்தளத்திலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

சீனா ஆப்-களின் தடையின் எதிரொலியாக டிக்டாக்-போலவே இருக்கும் HiPi என்கிற ஷார்ட் வீடியோ தளத்தை உருவாக்கியுள்ளது.

ஷேர்சாட்

ஷேர்சாட்

சமுக வலைத்தள பிரிவில் இந்தியாவின் டாப் 10 இடத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் ஷேர்சாட் டிக்டாக்-இன் இடத்தை நிரப்ப இந்திய மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சேவைகள், வசதிகள் கொண்ட ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஷோர்சாட் உருவாக்கிய இந்தச் செயலியின் பெயர் Moj. இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரத்திலேயே கூகிள் ப்ளே தளத்தில் 10,000க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 Big Players 3 New Apps: Trying to fill the void of Tiktok

3 Big Players 3 New Apps: Trying to fill the void of Tiktok
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X