ஐடி ஊழியர்களே உஷார்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை.. விஸ்பரூபம் எடுக்கும் ஆட்டோமேஷன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் தற்போது அனைத்து துறைகளிலும், வர்த்தகத்திலும் ஐடி சேவைகள் புகுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாகக் கொரோனா லாக்டவுனுக்குப் பின் இந்திய நிறுவனங்கள் ஆட்டோமேஷன் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

இதன் எதிரொலியாக இந்திய ஐடி துறையில் 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..! 8,820 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது..!

30 லட்சம் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்படுவதன் மூலம் சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாயிலாக மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய ஐடி நிறுவனங்கள் சேமிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான போட்டி இருக்கும் காரணத்தால் பணிகளை வேகமாகவும், குறைந்த செலவுகளில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டிய பல பிரிவுகள் வர்த்தகத்தை முழுமையாகச் செய்ய முடியாமல் முடங்கியது. இதன் வாயிலாகவே இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தற்போது ஆட்டோமேஷன் மிகவும் முக்கியக் கருவியாக மாறியுள்ளது.

ஆட்டோமேஷன் ஆதிக்கம்

ஆட்டோமேஷன் ஆதிக்கம்

டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களும், உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனங்கள் ஆட்டோமேஷன்-ஐ கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வருட காலத்தில் இந்திய ஐடி துறையில் அதிகளவிலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என நாஸ்காம் அறிவித்துள்ளது.

1.6 கோடி ஐடி ஊழியர்கள்

1.6 கோடி ஐடி ஊழியர்கள்

இந்திய ஐடி துறையில் சுமார் 1.6 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் சேவை பிரிவுகளிலும், பிபிஓ பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறார்கள் என நாஸ்காம் தரவுகள் கூறுகிறது.

குறைந்த திறன் சேவை மற்றும் பிபிஓ பிரிவு

குறைந்த திறன் சேவை மற்றும் பிபிஓ பிரிவு

குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் பிபிஓ பிரிவுகளில் ஆட்டோமேஷன் அதிகளவில் புகுத்தப்படும் காரணத்தால் 90 லட்சம் ஊழியர்களில் 30 சதவீதம் அல்லது 30 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதில் குறிப்பாக 7 லட்சம் பேரின் வேலைகள் முழுமையாக ஆட்டோமேஷன் செய்யப்பட உள்ளது.

டெக்னாலஜி மேம்பாடு, ஆட்டோமேஷன்

டெக்னாலஜி மேம்பாடு, ஆட்டோமேஷன்

இதர வேலைவாய்ப்புகள் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வரும் டெக்னாலஜி மேம்பாடு, ஆட்டோமேஷன் மூலம் மீதமுள்ள 23 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடம் சூழ்நிலை உருவாக உள்ளது.

பாங்க் ஆப் அமெரிக்கா ரிப்போர்ட்

பாங்க் ஆப் அமெரிக்கா ரிப்போர்ட்

சமீபத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் ஆட்டோமேஷன் வாயிலாக மட்டும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

சம்பள அளவீடுகள்

சம்பள அளவீடுகள்

குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் பிபிஓ பிரிவுகளில் பணியாற்றும் இந்திய ஊழியருக்கு வருடம் 25,000 டாலரும், அமெரிக்க ஊழியருக்கு வருடம் 50,000 டாலர் அளவிலான சம்பளம் அளிக்கப்படுகிறது.

100 பில்லியன் டாலர் சேமிப்பு

100 பில்லியன் டாலர் சேமிப்பு

தற்போது 30 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போது 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சேமிக்க முடியும் எனவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில் தற்போது டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆட்டோமேஷன் செய்யவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது.

ஐடி துறைக்குப் புதிய வர்த்தகம்

ஐடி துறைக்குப் புதிய வர்த்தகம்

ஒரு பக்கம் 100 பில்லியன் டாலர் சேமிப்பு மட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமேஷன் மென்பொருள் நிறுவும் வர்த்தகத்தையும் பெற முடியும். 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய மென்பொருள் உருவாக்குவதற்கான வர்த்தகத்தையும் பெற முடியும்.

ஐடி சேவை துறை

ஐடி சேவை துறை

அனைத்தையும் தாண்டி இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி சேவையை நம்பியிருக்கும் பிற துறை நிறுவனங்களுக்கு இத்தகைய ஆட்டோமேஷன் சேவை நிறுவப்படுவதன் மூலம் 24 மணிநேரமும் இயங்கும் ஒரு சேவை தளமும், 10 ஊழியர்கள் பணியாற்றும் வேலையை ஒரு சிஸ்டம் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 Million IT employees might lose their job by 2022: Amid heavy Automation in Indian IT Sector

3 Million IT employees might lose their job by 2022: Amid heavy Automation in Indian IT Sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X