ஆலியா பட்: படத்தில் சம்பாதிப்பது எல்லாம் தூசு.. பிசினஸில் கோடிக்கணக்கில் புரளுகிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் பெறும் சம்பளம் என்ற வருமானத்துடன் பிசினஸ் செய்து வருகின்றனர் என்பதும் சில நடிகர் நடிகைகள் சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை விட கோடிக்கணக்கில் பிசினஸில் சம்பாதித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் சினிமாவில் சம்பாதிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும் பிசினஸ் மூலமும் அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அவர் மூன்று பிசினஸ் மூலம் அதிகம் வருமானம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு விசா வாங்குவதற்கு இவ்வளவு அக்கப்போரா? ட்விட்டர் பயனாளியின் புலம்பல்! ஒரு விசா வாங்குவதற்கு இவ்வளவு அக்கப்போரா? ட்விட்டர் பயனாளியின் புலம்பல்!

நடிகை ஆலியாபட்

நடிகை ஆலியாபட்

கடந்த 2012ஆம் ஆண்டு 'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான ஆலியா பட், அதன்பின்னர் ஹைவே, 2 ஸ்டேட்ஸ், பத்ரிநாத் கி துல்ஹனியா, டியர் ஜிந்தகி, உத்தா பஞ்சாப் உள்பட பல திரைப்படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் புகழ் பெற்றார்.

ரூ.517 கோடி சொத்துமதிப்பு

ரூ.517 கோடி சொத்துமதிப்பு

2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 என்ற பட்டியலில் ஆலியாபட் இடம் பெற்று இருந்தார் என்பதும் அதே போல் 2017 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 30 வயதுக்குட்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.517 கோடி என்று கூறப்படுகிறது.

ஆலியா பட் சம்பளம்

ஆலியா பட் சம்பளம்

ஒரு திரைப்படத்திற்கு 15 முதல் 18 கோடி வரை சம்பளம் பெறும் ஆலியா பட்டின் திரைப்படங்கள் முதல் 6 வாரங்களில் சுமார் 120 கோடி வரை வசூல் செய்வதாகவும், அதனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசினஸ்

பிசினஸ்

இந்த நிலையில் ஆலியா பட் சினிமாவில் நடித்து சம்பாதிப்பது மட்டுமின்றி மூன்று விதங்களில் வருமானம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. முதலாவதாக அவர் குழந்தைகளுக்கான ஆடை பிராண்டான எட்-ஏ-மம்மாவின் நிறுவனர் மற்றும் உரிமையாளராக உள்ளார். 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இயற்கையான துணிகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத பட்டன்களை பயன்படுத்தி ஆடைகள் செய்யும் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் 10 மடங்கு வளர்ச்சி அடைந்து தற்போது 150 கோடி நிறுவனமாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

அதேபோல் தற்போது ஆலியா பட் பாலிவுட் திரையுலகின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஆலியா பட் தயாரித்த 'டார்லிங்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்றும் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை, டார்க் காமெடி கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இ-காமர்ஸ் நிறுவனம்

இ-காமர்ஸ் நிறுவனம்

நடிகை ஆலியா பட்டின் இன்னொரு வருமானம் என்பது இ-காமர்ஸ் நிறுவனமான நைக்காவில் முதலீடு செய்துள்ளார் என்பதுதான். இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஃபல்குனி நாயர் அவர்கள் தெரிவித்த ஒரு அறிக்கையில், '2012ஆம் ஆண்டில் ஆலியா பட் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதனையடுத்து இந்த நிறுவனம் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

பிற முதலீடு

பிற முதலீடு

இதுதவிர ஐஐடி கான்பூர் ஆதரவில் நடைபெறும் மறுசுழற்சி செய்யும் நிறுவனம் ஒன்றிலும் ஆலியா பட் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 130 சதவீத வளர்ச்சியை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆலியாபட் திரைப்படங்களில் சம்பாதிப்பதை விட பலமடங்கு பிசினஸில் சம்பாதித்து வருகிறார் என பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3 sources of Alia Bhatt's income aside from movies that contribute to her annual earnings

3 sources of Alia Bhatt's income aside from movies that contribute to her annual earnings | சம்பளம் ஒரு சின்ன பகுதி தான்... கோடிக்கணக்கில் பிசினஸில் சம்பாதிக்கும் ஆலியா பட்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X