அந்த ஒரு 'டிஸ்கஷன்'.. பணிநீக்கம் செய்யப்பட்ட மறுநாளே மீண்டும் வேலை கிடைத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் மீண்டும் ஒரே நாளில் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவை சேர்ந்த 31 வயது ஊழியர் ஒருவர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது வேலையில் திருப்தி இல்லாததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் முதலாளியை சந்தித்து ஒரே ஒரு உரையாடலை செய்த நிலையில் மறுநாள் அவருக்கு மீண்டும் வேலை கிடைத்தது.

முதல் மற்றும் ஒரே கோடீஸ்வரர்.. எந்த நாட்டு தொழிலதிபர் தெரியுமா? முதல் மற்றும் ஒரே கோடீஸ்வரர்.. எந்த நாட்டு தொழிலதிபர் தெரியுமா?

VizyPay ஸ்டார்ட் அப் நிறுவனம்

VizyPay ஸ்டார்ட் அப் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த VizyPay என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் கைல் மெக்கான் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இந்நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு இணைந்த நிலையில் படிப்படியாக பதவி உயர்வும் பெற்றார். விற்பனை கணக்கு மேலாளராக, அவர் ஒரு உற்சாகமான வேலையை தொடங்கி ஒருசில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்றார்.

வேலை நீக்கம்

வேலை நீக்கம்

இந்த நிலையில் கைல் மெக்கான் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அவரது வேலைத்திறன் சரியில்லை என்று நிர்வாகம் முடிவு செய்தததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வேலை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் VizyPay CEO ஆஸ்டின் மேக் நாப் அவர்களை சந்திக்கும்படி வலியுறுத்தப்பட்டார்.

முதலாளியுடன் சந்திப்பு
 

முதலாளியுடன் சந்திப்பு

இந்த சந்திப்பு கைல் மெக்கானுக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை கிடைக்க வழிவகை செய்தது. ஸ்டார்ட்அப்பில் தனது நேர்மறையான அனுபவங்களை பற்றி அவர் முதலாளியிடம் பேசியதாகவும், அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருந்ததையும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் வேலை கிடைத்தது.

வேலை கிடைத்தது எப்படி?

வேலை கிடைத்தது எப்படி?

இதுகுறித்து VizyPay CEO ஆஸ்டின் மேக் நாப் தனது சமூக வலைத்தள பதிவில், 'கைல் மெக்கான் உரையாடலில் இருந்து அவர் பணிவானவர் என்பதை புரிந்து கொண்டேன். அவர் கூறிய காரணங்களையும் ஏற்று கொண்டேன். சாக்குபோக்கு சொல்லாமல், அவர் சூழ்நிலையை கையாண்ட விதம் என்னை மறுபரிசீலனை செய்ய வைத்தது'' என்று தெரிவித்துள்ளார்.

உண்மையானவர் - நேர்மையானவர்

உண்மையானவர் - நேர்மையானவர்

மேலும் அவர் உண்மையானவர், நேர்மையானவர் மற்றும் கடின உழைப்பாளி என்று நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது எனது உள்ளுணர்வு அவ்வாறு நினைக்க வைத்தது. எனவே அவரை எப்படியாவது மீண்டும் VizyPay இல் வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

31 year old staff Was Fired And Then Hired Again On The Same Day

31 year old staff Was Fired And Then Hired Again On The Same Day | முதலாளியுடன் ஒரே ஒரு உரையாடல்.. பணிநீக்கம் செய்யப்பட்ட மறுநாள் மீண்டும் வேலை
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X