இந்திய பொருளாதார நிலையை புட்டு புட்டு வைக்கும் ஐந்து டேட்டா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் மிக முக்கிய காரணிகளில் ஒன்று நுகர்வோர் செலவீனம் (Consumer Spending) தான்.

ஒரு நுகர்வோர் தைரியமாக செலவழித்து பொருட்களை வாங்கினால் தானே, அடுத்து உற்பத்தி செய்பவர் தைரியமாக உற்பத்தியை அதிகரிப்பார். அப்போது தானே பொருளாதார சுழற்சி அதிகரித்து வளமாக இயங்கும்.

ஆனால் இந்தியாவில் கதையே வேறாக இருக்கிறது. பல கோடி இந்தியர்களுக்கு வேலை இல்லை, கையில் காசு இல்லை எனவே நுகர்வும் தரை தட்டிக் கொண்டு இருக்கிறது. அதைத் தான் தரவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சரி டேட்டாவுக்குள் செல்வோமா..!

நுகர்வோர் எண்ணிக்கை

நுகர்வோர் எண்ணிக்கை

சில்லறை வணிகம் செய்யும் கடைகளுக்கும் வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த மே மாதம் 30 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். இது month-on-month அடிப்படையில் கணக்கிட்ட தரவுகளாம். ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 % சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தரவுகளை ஷாப்பர் டிராக் என்கிற நிறுவனம் கொடுத்து இருக்கிறது.

க்ரெடிட் கார்ட் பரிவர்த்தனை

க்ரெடிட் கார்ட் பரிவர்த்தனை

க்ரெடிட் கார்ட் வழியாக செய்யும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் 2020-ல் 16.46 கோடியாக சரிந்து இருக்கிறது. அதற்கு முந்தைய மாதங்கள் எல்லாம் இந்த அளவுக்கு க்ரெடிட் கார்ட் பரிவர்த்தனை எண்ணிக்கை சரியவில்லை. ஆக செலவு செய்ய மக்கள் தயங்குகிறார்கள் என்பதை இதுவும் உறுதி செய்கிறது.

க்ரெடிட் கார்ட் செலவுகள்

க்ரெடிட் கார்ட் செலவுகள்

அதே போல க்ரெடிட் கார்ட் வழியாக செலவு செய்யும் தொகையும் கணிசமாக சரிந்து இருக்கிறதாம். மார்ச் 2020-ல் வெறும் 50,700 கோடி ரூபாயைத் தான் க்ரெடிட் கார்ட் வழியாக செலவழித்து இருக்கிறார்களாம். ஆனால் அதற்கு முந்தைய மாதத்தில் 62,500 கோடி ரூபாயை செலவழித்து இருக்கிறார்களாம்.

நுகர்வோர் நம்பிக்கை

நுகர்வோர் நம்பிக்கை

கடந்த ஜூன் 04, 2020 அன்று மத்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை சர்வே தரவுகளை வெளியிட்டது. நுகர்வோர்கள் மிகவும் நம்பிக்கை இழந்து இருப்பதாகவே சர்வே முடிவுகள் சொல்கின்றன. current situation index (CSI) வரலாறு காணாத அளவுக்கு, மே 2020-ல் 63.7 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறதாம்.

வருங்கால எதிர்பார்ப்புக் குறியீடு

வருங்கால எதிர்பார்ப்புக் குறியீடு

அதே போல future expectations index என்கிற தரவு எதிர்காலத்தைக் குறித்து மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாம். அந்த future expectations index மே 2020-க்கு 97.9 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறதாம். மோடி ஆட்சி காலத்தில் இந்த வருங்கால எதிர்பார்ப்பு இண்டெக்ஸ் 100 புள்ளிகளுக்குக் கீழ் போவது இதுவே முதல் முறையாம்.

மக்கள் தரப்பில் என்ன சொன்னார்கள்

மக்கள் தரப்பில் என்ன சொன்னார்கள்

பொது மக்களுக்கு பொருளாதார சூழல் பற்றியை பார்வை, வேலை வாய்ப்பு சூழல் மற்றும் குடும்பங்களுக்கு வரும் வருமானம் என எல்லாமே இப்போதும் சரி, அடுத்த ஒரு வருட காலத்திலும் சரி மோசமாக இருக்கும் எனத் தோன்றுவதாகச் சர்வேயில் சொல்லி இருக்கிறார்கள் மக்கள். அதோடு நுகர்வோர் தன் செலவுகளைக் குறைத்துக் கொண்டதையும் சர்வே சுட்டிக் காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 data that show the indian economy status

Indian economy status shown in 5 data. Consumer spending is too low. Credit card spending is also too low. Current situation index and future expectation index is also low.
Story first published: Thursday, June 18, 2020, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X