ஜூன் மாதம் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. பர்ஸை பத்திரமா பார்த்துக்கோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை அதிகளவில் பாதித்து வகும் நிலையில் ஜூன் மாதத்தில், தனிநபர் நிதி தொடர்பான சில முக்கியமான மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதனால் மக்கள் ஜூன் மாதம் முதல் பல சேவைகளுக்குக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

இதில் முக்கியமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் வாங்கியவர்கள், ஆக்சிஸ் வங்கி மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு இந்த ஜூன் மாற்றங்கள் முக்கியமானவை.

ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் ஐந்து முக்கியப் பணம் மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்துக்கொண்டு பணத்தை மிச்சப்படுத்தும் வழியைத் தேடுங்கள்.

இந்தியாவில் இன்னொரு தைவான்.. வேதாந்தாவின் மெகா திட்டம்.. இனி வேற லெவல்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 40 சதவீதம் அதிகரித்து 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வின் வீட்டுக் கடன் ரெப்போ லிங்கிடு வட்டி விகிதம் முன்பு 6.25 சதவீதமாக இருந்தது, தற்போது இதை 6.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதோடு Credit Risk Premium (CRP) சேர்க்கப்படும் காரணத்தால் அடிப்படை வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கூடுதலான ஈஎம்ஐ
 

கூடுதலான ஈஎம்ஐ

இந்த வட்டி விகித உயர்வு மூலம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வீட்டுக் கடன் வாங்கிய அனைவருக்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து மாத மாதம் செலுத்தும் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும். எனவே அனைவரும் கூடுதலான தொகை செலுத்தத் தயாராகுங்கள்.

3ஆம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம்

3ஆம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம்

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்புப் படி பழைய கார், பைக், புதிய கார் பைக் ஆகியவற்றுக்கான 3ஆம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரிமியம் பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது.

இதனால் வாகனங்களுக்கு இன்சூரனஸ் தீர்ந்துவிட்டால் முன் கூட்டியே எடுக்க முயற்சி செய்யலாம்.

தங்கம் ஹால்மார்க்

தங்கம் ஹால்மார்க்

ஜூன் 1ஆம் தேதி முதல் மத்திய அரசின் 2ஆம் கட்ட ஹால்மார்க் விதிகள் நடைமுறைக்கு வருகிறது. இந்த 2ஆம் கட்ட விதிகள் கீழ் 256 மாவட்டங்கள் உடன் புதிதாக 32 மாவட்டங்கள் சேர்க்கப்பட உள்ளது.

இதன் மூலம் 288 மாவட்டங்களில் 14, 18, 20, 22, 23 மற்றும் 24 காரட் தரம் கொண்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும், மேலும் அவை ஹால்மார்க் தர சான்றிதழ் பெற்று இருக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது.

மேலே குறிப்பிட்டு உள்ள 6 தரத்திற்கு மாற்றாக வேறு தரத்தில் விற்பனை செய்யப்படக் கூடாது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகளில் ஆதார் பேமெண்ட் சிஸ்டம் (AEPS) வருகிற ஜூன் 15 முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் பேமெண்டுக்கான கட்டணங்கள் மாற உள்ளது.

ஜூன் 15 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 3 பரிமாற்றங்கள் மட்டுமே இலவசம். இந்தப் பரிமாற்றத்தில் பணம் எடுத்தல், பணம் டெப்பாசிட் செய்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் போன்ற அனைத்தும் அடங்கும்.

 

கட்டண விபரம்

கட்டண விபரம்

3 பரிமாற்றத்திற்குப் பின்பு பணம் எடுக்க அல்லது டெப்பாசிட் செய்ய வேண்டும் என்றால் 20 ரூபாய் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க 5 ரூபாய் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியின் திருத்தப்பட்ட சேமிப்பு கணக்குக் கட்டணங்கள் கீழ் நகர்ப்புற/கிராமப்புறங்களில் சேமிப்பு மற்றும் சம்பள கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்புத் தேவை ரூ.15,000லிருந்து ரூ.25,000 உயர்த்தப்பட்டு உள்ளது. இல்லையெனில் ரூ.1 லட்சம் டெர்ம் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

லிபெர்டி சேமிப்புக் கணக்கிற்கான தேவை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அல்லது ரூ.25,000 செலவழிக்க வேண்டும் என விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கட்டணங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வர உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 important changes in June 2022 Which affects your personal finance

5 important changes in June 2022 Which affects your personal finance ஜூன் மாதம் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. பர்ஸை பத்திரமா பார்த்துக்கோங்க..!
Story first published: Thursday, May 26, 2022, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X